India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரியலூர் பெரியகற்கை கிராமத்தை சேர்ந்தவர் விஜயக்குமார். நேற்று(மார்ச்.20) ஆண்டிமடம் – விருத்தாச்சலம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கலில் 19ம் தேதி மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.ச.உமா தலைமையில் மக்களவைத் தேர்தல் 24 முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம் என்ற தலைப்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து தேர்தலில் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து துண்டு பிரசுரங்கள் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

சிவகங்கை மாவட்டம் கமுதி தாலுகா பங்களா புதுக்குடியை சேர்ந்தவர் சூரியா (21).இவரது நண்பர் சதீஷ்கண்ணன் (21).இருவரும் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் படித்து வருகின்றனர். நேற்று இருவரும் மோட்டார்சைக்கிளில் புதுக்கோட்டை நோக்கி பைபாஸ் ரோட்டில் சென்றனர்.புதுக்கோட்டையில் இருந்து வந்த லாரி பைபாஸ் ரோடில் இவர்கள் இருசக்கர வண்டி மோதியதில் சூரியா சம்பவ இடத்திலேயே பலியானார்.

பழனி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சாலையோர வியாபாரிகள் இன்று மனு கொடுத்தனர். சாலையோர சிறு விற்பனையாளர் சங்கம் சார்பாக அடிவாரம் சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் கேட்டும், குதிரை வண்டி ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்து தரக்கோரி பழனி கோட்டாட்சியர் சரவணனை சந்தித்து மனு கொடுத்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கல்யாண வைபவத்தையொட்டி வருகிற 28ஆம் தேதி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் நடை சாத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அன்று அதிகாலை மீனாட்சி சுந்தரேசுவரா் பஞ்சமூா்த்திகளுடன் புறப்பாடாகி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோயிலுக்கு சென்று திருக்கல்யாண உற்சவத்தில் எழுந்தருளுகிறார். இதனால் நடை திறக்கப்படாது என அறிவித்துள்ளனர்.

2024 பாராளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக ஏப்ரல். 19 அன்று நடைபெற உள்ளது. விளவங்கோடு சட்டமன்ற அதிமுக வேட்பாளராக மகளிரணி துணைச்செயலாளர் கன்னியாகுமரி சிறுபான்மை கிறிஸ்தவ மகளிர் முன்னேற்ற சங்க கெளரவ தலைவர் ராணி அறிவிக்கப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி, சூளகிரி தீர்த்தம் சாலையில் மது விலக்கு காவல் ஆய்வாளர் ஷர்மிளா பானு தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிருஷ்ணகிரி நோக்கி வேகமாக வந்த காரை சோதனை செய்தனர். அதில் தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட கர்நாடக மதுபான பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு திருப்பத்தூரை சேர்ந்த ஓட்டுநர் வீரமணி என்பவரை கைதுசெய்து அவரிடமிருந்து 1400 மதுபாட்டில் நேற்று பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக சேவியர் தாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று(மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.

செஞ்சி தலவாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் (26). இவர் வானூர் தாலுகா அலுவலகத்தில் லைசென்ஸ் சர்வேயராக பணியாற்றிவந்தார். நேற்று இரவு வானூர்-திருச்சிற்றம்பலம் கூட்ரோடு செல்லும் சாலையில் ஆகாசம்பட்டு பகுதியில் பைக்கில் சென்றபொழுது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். ஜிப்மரில் சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று இரவு இறந்தார். இதுகுறித்து வானூர் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

திருச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக கருப்பையா அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.