Tamilnadu

News March 23, 2024

உதகையில் மண்டல பாஜக கூட்டம்

image

உதகை அருகே தும்மனட்டியில் உதகை கிழக்கு  மண்டல் மையக்குழு கூட்டம் நேற்று (மார்ச் 22) நடைபெற்றது. மண்டலத் தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார்.  மாநில செயற்குழு உறுப்பினர்  ராமன், மாவட்ட துணை தலைவர் பாபு,  மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், மாவட்ட தமிழ் இலக்கியப் பிரிவுத் தலைவர் ராஜூ, மண்டலப் பொதுச்செயலாளர் பெள்ளி ராஜ் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

News March 23, 2024

 மாரியம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவ விழா

image

திருத்துறைப்பூண்டி அருள்மிகு ஶ்ரீ முள்ளாச்சி மாரியம்மன் கோவில் பெருந்திருவிழா நேற்று நடைபெற்றது. தி.து.பூண்டி மலர் வணிக வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

News March 23, 2024

வாழ்த்து தெரிவித்த கடலூர் பாஜக நிர்வாகிகள்

image

மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநில‌ செயலாளர் வினோஜ் செல்வத்தை, கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கோவிலானூர் ஜி. மணிகண்டன் தலைமையில், பாஜக மாவட்ட, மண்டல நிர்வாகிகள் நேற்று நேரில் சென்று சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

News March 23, 2024

ஜோலார்பேட்டை வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

image

திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய பகுதிகளில் திருவண்ணாமலை மற்றும் வேலூர் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள மார்ச்.26 திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ தேவராஜ் செய்து வருகிறார்.

News March 23, 2024

ராம்நாடு: இண்டி கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம்

image

இராமநாதபுரம் கேணிக்கரையில் உள்ள தனியார் திருமண மஹாலில் நாடாளுமன்றத் தொகுதியில் இண்டி கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
கீழக்கரை சார்பாக நகர் கழக செயலாளர் பசீர் அஹமது தலைமையில் கீழக்கரை நகர் கழக நிர்வாகிகள் பெரும்பாலோனோர் கலந்துகொண்டனர். மாவட்டத்தில் உள்ள பல ஊர்களிலிருந்து கழக நிர்வாகிகள் பலரும் வந்து கலந்து கொண்டனர்.

News March 23, 2024

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு

image

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டையில் நேற்று அங்கன்வாடி பணியாளர்கள், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அகல் விளக்கு ஏற்றி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். இதில் அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 

News March 23, 2024

பழனி பங்குனி உத்திரத் திருவிழாவில் திருக்கல்யாணம்

image

பழனி அடிவாரம் குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் கோயில் முன் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் அமைக்கப்பட்ட தனிமேடையில் இன்று(மார்ச்.22) நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து தம்பதி சமேதராக சுவாமி, வெள்ளித்தேரில் சந்நிதி வீதி, ரதவீதிகளில் உலா எழுந்தருளுகிறார். நாளை(மார்ச்.23) மலையடிவாரத்தில் உள்ள கிரிவீதியில் தேரோட்டம் நடைபெறுகிறது.

News March 23, 2024

விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று விடுமுறை

image

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோவில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 14ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு இன்று (மார்ச் 23) பணிநாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிர்வாக காரணங்களால் இன்றைக்குப் பதிலாக மார்ச் 30ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 22, 2024

வாகனங்களில் ஒட்டுவில்லை ஒட்டி விழிப்புணர்வு

image

பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, கடலூர் டவுன்ஹால் அருகே 100% வாக்களிப்பது குறித்து மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகளின்
வாகனங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் இன்று (22.03.2024) ஒட்டுவில்லைகளை ஒட்டினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர்
இராஜசேகரன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

News March 22, 2024

வருடத்திற்கு ஒரு முறை நிகழும் சேர்த்தி சிறப்பு சேவை

image

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று நம் பெருமாள் உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் சென்றடைந்தார். இதனை அடுத்து கோவிலில் இன்று வருடத்திற்கு ஒருமுறை நிகழும் சேர்த்தி சிறப்பு சேவை நடைபெற்றது. இதனை ஒட்டி நம் பெருமாள் மற்றும் கமலவல்லி நாச்சியார் இருவரும் இணைந்து கோவில் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளித்தனர்.

error: Content is protected !!