India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஈரோடு முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமாரிடம் நேற்று (மார்ச்.20) ரங்கம்பாளையம் இரணியன் வீதியை சேர்ந்த மின்னல் முருகேஷ் (55) என்பவர் ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட முதல் நபராக வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தலில் போட்டியிட ஆட்டோ, சிலிண்டர் அல்லது பிரஷர் குக்கர் ஆகிய சின்னங்களில் ஏதேனும் ஒன்றை வழங்கிட கேட்டுக்கொண்டார்.

விழுப்புரம் மக்களவை (தனி) தொகுதி வேட்புமனு தாக்கல் நேற்று (மார்ச் 20) துவங்கியது. மக்களவை தனித் தொகுதியான விழுப்புரத்தில் நேற்று தேர்தல் அலுவலர் காலை 11 மணி முதல் 3 மணி வரை காத்திருந்தார். ஆனால் மனு தாக்கல் செய்ய யாரும் வரவில்லை. மனு தாக்கல் நேற்று முதல் வரும் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 28ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை, 30ஆம் தேதி வாபஸ் பெற கடைசி நாள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சோழவந்தான் தொகுதியில் தேர்தல் விதிமுறை அமல்படுத்தப்பட்டதால் தொகுதி முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழுவின் பணிகளை நேற்று வாடிப்பட்டி வட்டாட்சியர் மூர்த்தி நேரில் ஆய்வு நடத்தி, வாகன தணிக்கை பணியை பார்வையிட்டார்.

நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட். கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் நேற்று நாகை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, சி.பி.எம். மாவட்ட செயலாளர் மாரிமுத்து உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது நாகை எம்.பி.செல்வராசு, திருத்துறைபூண்டி எம்எல்ஏ மாரிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு அருள்மிகு ஸ்ரீ செங்கமலத்தாயர் சமேத சென்னகேசவ பெருமாள் கோயிலில் நேற்று 20.03.2024, இரவு, பங்குனி பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளில் பெருமாள் பெரிய திருவடியான கருடனின் வாகனத்தின் மீது ராஜா கம்பீரமான அலங்காரத்தில் புறப்பாடாகி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் வைக்கப்பட்டுள்ள மின்னனு திரை மூலம் மக்களவை தேர்தலுக்கான முறையான வாக்காளர் தேர்தல் பங்கேற்பு பற்றிய விழிப்புணர்வு விளம்பரத்தினை நேற்று (மார்ச்.20) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்

திருச்சி மாநகரில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஏற்கனவே 142 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், நேற்று உறையூர் போலீஸ் நிலைய வளாகத்தின் பின்புறத்தில் கேட்பாரற்று கிடந்த 10 டூவிலர்களையும் , டூவீலர் நிறுத்துமிடத்தில் கேட்பாரற்று கிடந்த 12டூவீலர்கள் என 22வாகனங்களை உறையூர் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட இரண்டு பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. மாவட்டத்தில் 15,09,906 ஆண், 15,71,093 பெண், 595 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 30,81,594 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக மாவட்டத்தில் 3077 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதனை தற்போது 3096 வாக்குச்சாவடிகளாக உயர்த்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சங்கரன்கோவிலை சேர்ந்த டாக்டர் ராணி ஸ்ரீகுமார் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் 20ம் தேதி மாலையில் அவர் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து ஆசி பெற்றார் உடன் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ மற்றும் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் உடனிருந்தனர்

திருக்கோகா்ணம் அருங்காட்சியகம் அருகில் உள்ள பகுதியில், 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்களுக்கு அஞ்சல் வாக்குப் பதிவு செய்வதற்கான படிவங்கள் அவா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கும் பணியை, மாவட்டத் தோ்தல் அலுவலா் ஐ.சா.மொ்சி ரம்யா புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். புதுக்கோட்டை மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்டுள்ள 5,417 ஆண் வாக்காளா்களும் , 6,475 பெண் வாக்காளா்கள் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.