India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தலை 2024 முன்னிட்டு 100% வாக்களிப்பை வலியுறுத்தி இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி (ம) கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் இன்று துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி ரா.பேபி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கோ.அரங்கநாதன் உள்ளனர்.
நாகை நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேளாங்கண்ணி திமுக பேரூர் கழகம் சார்பில் பணிமனை திறப்பு விழா இன்று நடைபெற்றது.
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்று பணி மனையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றி சிபிஐ வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். இதில் திமுக மாவட்ட செயலாளர் கௌதமன், தாட்கோ தலைவர் மதிவாணன், கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் பக்தர்கள் வருகை தந்திருந்தனர். தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்து வந்த பலரும் மாதாவை தரிசனம் செய்துவிட்டு பின்னர் பொழுதைக் கழிக்க ஒரே நேரத்தில் கடற்கரையில் குவிந்தனர். இதனால் நேற்று காலை முதல் இரவு வரை மக்கள் வெள்ளத்தால் கடற்கரை நிரம்பி வழிந்தது.
நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் நேற்று வெளியானது. இதில் சுயேட்சை வேட்பாளரான விஜயராகவனுக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டது. ஏற்கனவே நாகை சட்டமன்ற தேர்தலில் விசிக சார்பில் ஆளூர் ஷாநவாஸ் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது திமுக தலைமையிலான கூட்டணியில் சிபிஐ சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வாக்குகள் சிதறுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
வேளாங்கண்ணியில் உதவிக்கரங்கள் அறக்கட்டளை சார்பில் ஈஸ்டர் பெருவிழா நடைபெற்றது. இதில் மும்மதத்தினர் பிரார்த்தனை செய்யப்பட்டு 1000 ஏழை எளியோருக்கு சுட சுட பிரியாணி வழங்கப்பட்டது. இதில் நிறுவனர் ஆண்டோ பிராங்கிளின் ஜெயராஜ் ,பங்குத்தந்தை அற்புதராஜ், ரஜதநீலகண்டன், ஜமாத் ஜகபர் சாதிக் ,ஜூலியட் அற்புதராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட தமிழக மட்டுமல்லாமல் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் வந்துள்ளனர். இந்நிலையில் போக்குவரத்தை நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பேருந்துகள், கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் அனுப்பி வைக்கப்பட்டு ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
நாகை நகராட்சிக்கு உட்பட்ட 17 மற்றும் 23வது வார்டு பகுதிகளில் இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவாக மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் தலைமையில் நகர செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் லோகநாதன் உள்ளிட்டோர் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.
சமூக நீதி, சம நீதி என பேசும் திமுக அவர்களது குடும்பத்தை வளர்ப்பது, அவர்களது பிள்ளைகளை எம்.பி., எம்.எல்.ஏ. ஆக்குவது, அவர்களது உறவினர்களை அமைச்சர் ஆக்குவது, இது தான் அவர்களின் சமூக நீதி எனவும், திமுகவினர் வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் கருப்பு கொடி காட்டப்படுவதால் பயந்து பயந்து பிரசாரம் மேற்கொள்கின்றனர் என அண்ணாமலை இன்று பேசினார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், நாகையில் இன்று பாஜக நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ்-க்கு ஆதரவாக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்கிறார். நாகை அவுரித்திடலில் பகல் 12 மணிக்கு மாநில தலைவர் வருகை தர உள்ளதாக கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம், திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விவேக்ரவிராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அந்த மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின் பேரில் மறித்து போலீசார் சோதனை நடத்தினர். அவர் திருப்புகலூர் சேர்ந்த வீராச்சாமி என்பதும் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தியது தெரியவந்தது. அவரை கைது செய்து, 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
Sorry, no posts matched your criteria.