Dharmapuri

News March 25, 2024

வேட்புமனுவை தாக்கல் செய்த பா.ம.க  வேட்பாளர்

image

தருமபுரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பெண் பா.ம.க வேட்பாளர் திருமதி சௌமியா அன்புமணி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் அன்புமணி ராமதாஸ் எம்பி மற்றும் பென்னாகரம் எம்எல்ஏ, ஜி. கே.மணி. பா.ஜ.க மாவட்ட தலைவர் பாஸ்கர் அமமூக மாவட்ட பிரதிநிதி உடனிருந்தனர்.

News March 25, 2024

அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் மருத்துவர் அசோகன் இன்று மாவட்ட தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு அளித்தார். முன்னாள் அமைச்சர் அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் மாநில அவைத்தலைவர் மருத்துவர் இளங்கோவன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் வெற்றிவேல் ஆகியோர் இருந்தனர்.

News March 25, 2024

தர்மபுரியில் திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

image

தருமபுரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வக்கீல் ஆ.மணி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சாந்தியிடம் வேட்புமனுவை வழங்கினார். உடன் உழவர் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர்கள் பழனியப்பன் தடங்கம் சுப்பிரமணி இருந்தனர்.

News March 25, 2024

தருமபுரியில் யார் யார் இன்று மனு தாக்கல்!

image

மக்களவை பொதுத்தேர்தல்-2024, ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேட்பு மனு தாக்கல் துவங்கியது. இந்நிலையில் இன்று(மார்ச் 25) தருமபுரி மாவட்டத்தில் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் அ.மணி மற்றும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

News March 25, 2024

தேர்தல் திருவிழா : வேட்பு மனு தாக்கல்

image

மக்களவை தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20ல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கிய கட்சி வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News March 25, 2024

தருமபுரி: பாமக நிறுவனர் தலைமையில் ஆலோசனை

image

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி, சமூக ஊடகப் பேரவை (பாமக)மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நேற்று(மார்ச் 24) அவரது இல்லத்தில் நடைபெற்றது. 2024 மக்களவைத் தேர்தலில், அரசியல் களத்தில் ஊடகப் பேரவையின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று மாநிலப் பொறுப்பாளர்கள் செயல்திட்டங்களை வகுத்து கொடுத்தனர். இதில் ஏராளமான மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News March 24, 2024

தர்மபுரி அருகே சோகம்

image

பாலக்கோடு ஜோதி அள்ளியை சேர்ந்த விவசாயி ராஜீ 55. இவரது மனைவி சாலம்மாள் . குடிப்பழக்கம் உடைய ராஜீக்கு அல்சர் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். மனைவி குடிக்க வேண்டாம் என கண்டித்துள்ளார். மனமுடைந்த ராஜி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பாலக்கோடு போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 24, 2024

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் வேட்புமனு தாக்கலா?

image

தருமபுரி மாவட்டம், தருமபுரி நாடாளுமன்ற தொகுதி ,தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளர் திருமதி. சௌமியா அன்புமணி ராமதாஸ் (பாமக) அவர்கள் வருகின்ற மார்ச் 25 ஆம் தேதி திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக தருமபுரி நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள் வேட்பாளரை வரவேற்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

News March 24, 2024

நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு

image

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, தர்மபுரியில் மருத்துவர் கா.அபிநயா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 24, 2024

தருமபுரி அருகே பங்குனி உத்திர திருவிழா!!

image

அன்னசாகரம் கிராமத்தில் பங்குனி உத்திரம் திருவிழா புகழ்பெற்ற அருள்மிகு ஶ்ரீ சிவ சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று இரவு 8 மணியளவில் பங்குனி உத்திர திருவிழா விழா கோலாகலம் நடைபெற்றது. விழாவில் வள்ளி முருகப் பெருமான் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!