India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்து, காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி மேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது. அதன் காரணமாக கோவை மாவட்டத்திற்கு தற்போது அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மேலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை, பூமார்க்கெட் பகுதியில் 108 ஆம்புலன்ஸ் மைய அலுவலகம் இயங்கி வருகின்றது. இங்கு வரும் 04.12.2024 புதன்கிழமை அன்று வேலைவாய்ப்பு நடைபெற உள்ளது. இதில் மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 108 சேவையில் பணியாற்ற விருப்பம் உள்ளவர் கள் 73977-24837,அல்லது 73977-24827 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பேசலாம் என 108 ஊழியர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்களை புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்து, காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி மேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது. அதன் காரணமாக கோவை மாவட்டத்திற்கு தற்போது அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 2 நாள் மழை பெய்துவரும் நிலையில், மக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கோவை கலெக்டர் கிராந்தி குமார்பாடி இன்று கூறியதாவது, இ-நாம் எனும் திட்டம் மற்றும் வேளாண் வர்த்தக சந்தை ஒருங்கிணைப்பாளர்களால் நியமனம் செய்யும் முன்மாதிரி திட்டத்தின் மூலம், விளைபொருட்களை விற்பனை செய்து அதிக லாபம் பெறலாம். இதற்கு விருப்பம் உள்ள விவசாயிகள் தொண்டாமுத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை அனுகலாம் என்று தெரிவி்த்துள்ளார்.
கோவை மாவட்டத்தில், காட்டூர், சாய்பாபா காலனி, ஆர்.எஸ்.புரம் உக்கடம் பகுதிகளில் இன்று (டிசம்பர்.2) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று கோவை மாநகர போலீசார் தங்களது முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு பயிற்சி (05.12.2024 – 06.12.2024) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இதில் மசாலா பொடிகள், தயார்நிலை பேஸ்ட், காளான் ஊறுகாய், வாழைப்பூ ஊறுகாய் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 94885-18268 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் இன்று கூறியதாவது, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், மாநகராட்சி மேயர் தலைமையில் நடைபெற்று வருகின்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நாளை (03.12.2024) அன்று நிர்வாக காரணங்களால் நடைபெறாது எனவும் பொதுமக்கள் நாளை வந்து ஏமாற வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் கனமழை காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக தொடர்பு கொள்ள காவல் கட்டுப்பாட்டு அறை, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று முதல் செயல்படத் துவங்கியுள்ளது. பொதுமக்கள் 1077 அல்லது, 0422-2306051, 0422- 2302323 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்களை புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்து, காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி மேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது. அதன் காரணமாக கோவை மாவட்டத்திற்கு தற்போது அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலை முதலே மழை பெய்துவரும் நிலையில், மக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வர பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்கள், அணை பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள மக்கள், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.