India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை விமான நிலையத்திலிருந்து பல்வேறு நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி மொத்தமாக 32 விமானங்கள் தினம் தோறும் இயக்கப்படுகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை 10,525 பயணிகள் ஒரே நாளில் பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் இல்லாத பயணிகளின் வருகை, ஒரே நாளில் பதிவாகியுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கோவை சிவானந்தா காலனி பகுதியில் இன்று காவல்துறையினர் அனுமதியின்றி இந்து உரிமை மீட்பு குழு சார்பாக வங்கதேச இந்து உரிமை மீட்பு போராட்டம் நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் ஹெச்.ராஜா, மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனையடுத்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமணம் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.
கோவை மாநகரத்தில் கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரையில் புதிதாக 1,19,510 வாகனங்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 15 சதவீதம் அதிகம். இதே போன்று, வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தால், அதற்கேற்ப போக்குவரத்து உட்கட்டமைப்பு வசதிகளை, கோவை மாநகர போலீசாரும், கோவை மாநகராட்சியும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. மூன்றரை கால திமுக ஆட்சியில் தமிழக மக்கள் ஆட்சிமீது கடும் கோபத்தில் உள்ளனர். இதற்கு சாட்சியே விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் மீது சேறு வீசபட்டது வீசப்பட்டது. உள்ள நாட்களையாவது மக்களுக்கான ஆட்சியை அரசு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையம் பங்களா மேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆறுமுகம். இவர் கல்லாறுக்கு சவாரிக்காக சென்றுள்ளார். அப்போது, சத்யா நர்சரி அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென சாலையின் குறுக்கே மாடு ஒன்று வந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க ஆட்டோவை திருப்பியுள்ளார். அப்போது, எதிரே வந்த கார் மீது மோதியதில் ஆட்டோ டிரைவர் ஆறுமுகம் பலியானார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை மாவட்டத்தில் இன்று (03.12.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த காங்கேயம்பாளையத்தில் உள்ள அஸ்வினி மஹால் திருமண மண்டபத்தில், வரும் 11.12.2024 அன்று, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில், மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி தீர்வு பெறலாம் என இன்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி ஆலோசித்து முடிவெடுப்பது தான் ஒரு மாநில முதல்வருக்கான மாண்பு. மக்களுக்கு சரியான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிடாமல், பல வட மாவட்டங்களை வெள்ளத்தில் மிதக்க விட்டது, உங்கள் அரசு உண்டாக்கிய பேரழிவுதானே? என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
தக்காளி காய்ச்சல் பெரியவர்களை விட குழந்தைகளை அதிகமாக தாக்குகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் உருண்டையாகவும், திரவம் நிறைந்தும் கொப்பளங்களுடன் வலியும் இருக்கும். இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு, தற்போது சிகிச்சைக்கு வருபவர்களில் 40% பேருக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. மேலும், தினமும் 10 குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் கண்டறியப்படுகிறது.
கோவை, பூமார்க்கெட் பகுதியில் 108 ஆம்புலன்ஸ் மைய அலுவலகம் இயங்கி வருகின்றது. இங்கு வரும் 04.12.2024 புதன்கிழமை அன்று வேலைவாய்ப்பு நடைபெற உள்ளது. இதில் மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 108 சேவையில் பணியாற்ற விருப்பம் உள்ளவர் கள் 73977-24837,அல்லது 73977-24827 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பேசலாம் என 108 ஊழியர்கள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.