India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகம் முழுவதும் பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசால் அறிவிக்கப்பட்டது. இதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரும் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரியினங்களை மக்கள் எளிதில் செலுத்த ஏதுவாக அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வரிவசூல் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்றும், நாளையும் கோவை மாநகரில் உள்ள 5 மண்டலங்களிலும் வரி வசூல் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வால்பாறையில் மாறி வரும் சிதோஷ்ண நிலையால், காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. வைரஸ் காய்ச்சல் அறிகுறி இருந்தால் சிகிச்சை எடுத்துக்கொள்ள மருத்துவமனைக்கு வர வேண்டும். காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன.வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க, குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் இன்று (06.12.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் உட்கோட்ட அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பழங்குடியினர் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, மற்றும் பயிற்சிகள் வழங்கப்படும். இதற்கு 18 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். கல்வி தகுதியாக குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி உள்ள ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி பணிபுரியும் பள்ளி ஆசிரியர்கள், தற்செயல் விடுப்பு, வரையறுக்கப்பட்ட விடுப்பு, இணைப்பு மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு கோரும் ஆசிரியர்கள் நேரடியாக கோவை மாநகராட்சி ஆணையாளர் அனுமதிக்கு பின்பே விடுப்பு எடுக்க வேண்டும் என சுற்றக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க சிரமப்படுவதாக கூறுகின்றனர்.
கோவை வெள்ளலூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ரூ. 2 லட்சம் முன் பணம் செலுத்தி கார் வாங்கியுள்ளார். மீதமுள்ள பணத்திற்கு கடன் வாங்கியுள்ளார். கடன் தவணையை முறையாக செலுத்தாததால், கடன் கொடுத்த நிறுவனத்தின் ஊழியர்கள், நேற்று மணிகண்டன் வீட்டிற்கு வந்தனர். அப்போது மணிகண்டனின் மனைவி பிரியா, தன் வீட்டு நாயை ஏவி விடவே, அது ஒரு ஊழியரை கடித்தது. இது குறித்த புகாரின்பேரில் போலீசார் பிரியாவை கைது செய்தனர்.
தவணை தவறிய கடன்களுக்கான கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். கடன்தாரர்களின் வட்டி சுமையை கணிசமாகக் குறைக்கும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, 9% சாதாரண வட்டி விகிதத்தில் நிலுவை தொகையை, ஒரே தவணையில் செலுத்தி, தங்களது கடன்களை தீர்வு செய்து, பயனடையலாம் என, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், வாரந்தோறும் புதன்கிழமை தவிர்த்து எஞ்சிய 6 நாட்களும் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் போது, 1 சில பயணிகள், ரயில்களில் கற்பூரம், விளக்கு ஏற்றும் செயல்களை பின்பற்றுகின்றனர். இதன் காரணமாக தீவிபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பயணிகள் இத்தகைய நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். இதை மீறி செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் கோட்ட ரயில்வே தெரிவித்துள்ளது.
கோவையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகை பட்டறைகள் உள்ளன. இதனால் கோவையில் தங்க நகை பூங்கா வேண்டும் என்ற சில கோரிக்கைகளை தங்க நகை தொழிலாளர்கள் அண்மையில் முதல்வரிடம் தெரிவித்தனர். அவரும் உறுதியளித்தார். இந்நிலையில் சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.126 கோடியில் 3.41 ஏக்கரில் தங்க நகை தொழிற்பூங்கா அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.
Sorry, no posts matched your criteria.