India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்டத்தில், சிங்காநல்லூர், காட்டூர், சாய்பாபா காலனி, ஆர்.எஸ்.புரம் உக்கடம் ஆகிய பகுதிகளில் இன்று (டிசம்பர்.9) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட, தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று, கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
கோவை வெள்ளியங்கிரி மலையில், கார்த்திகை மகா தீபம் ஏற்ற, சென்னை உயர் நீதிமன்றம், அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, அங்கு ஜன.14ம் தேதி வரை, நந்த பூஜை, கார்த்திகை மகா தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆயுதங்களைக் கொண்டு செல்லக் கூடாது, விலங்குகளுக்குத் தீங்கிழைக்கக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதோடு, காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூஜைகள் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயராணி (68). இவர் நேற்று கோவை சரவணம்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபர், ஜெயராணி அணிந்திருந்த, 5 சவரன் தங்க நகையை, பறித்துக் கொண்டு, அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் இது குறித்து சரவணம்பட்டி காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்ட சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 77 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இப்பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு அடைப்பிடையில் தேர்வு செய்யப்படுவார்கள். இங்கே <
கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை, ஆகிய பகுதிகளில் இன்று (டிசம்பர்.8) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதில் எந்த தவறும் இல்லை. அவருக்கு அப்படிப் பேச உரிமை உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் கட்டுப்பாட்டில் இல்லை. லாட்டரி அதிபர் மார்டீனின் மருமகனின் கட்டுப்பாட்டில் உள்ளது” எனத் தெரிவித்தார்.
கோவை, சாய்பாபா காலனி பகுதியில், விபச்சாரம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்தில் காவல்துறையினர் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த, கோவை சேர்ந்த உமாராணி (55) மற்றும் கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சித்ரா (45) என்பவர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. உதயநிநி தேர்தலில் நின்று வென்றவர். அவரை எப்படி பிறப்பால் முதல்வரானவர் என சொல்ல முடியும். புரோமோஷன் கூடாது என்பது உண்மை. தேர்தலில் மக்களை சந்தித்து வருபவர்களை பிறப்பால் வந்தவர்கள் என சொல்ல முடியாது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
கோவை மாநகராட்சி (ம) கோவை மாநகர காவல் இணைந்து இன்று “ஹாப்பி ஸ்ட்ரீட்” நிகழ்வு நடத்துகிறது. இந்நிகழ்வு ஆர்.எஸ்.புரம் பகுதியில் காலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெறுகிறது. இதில் யோகா, ஜூம்பா டான்ஸ், மிமிக்கிரி, வள்ளி கும்மி, டி.ஜே ஆகிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
கோவை மாவட்டத்தில் இன்று (07.12.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.