India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

செந்தில் பாலாஜி ஜாமின் மனு ஏப்.1ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமின் கோரியும், 3 மாதத்தில் அமர்வு நீதிமன்றம் வழக்கை முடிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் முடிவில் அவருக்கு ஜாமின் கிடைக்குமா? என்பது தெரியவரும்.

நீண்ட நாள்களுக்குப் பின் ஐபிஎல் தொடரின் தொடக்க போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. தோனிக்கு இது கடைசி தொடராக இருக்கலாம் என்பதால் சேப்பாக்கம் மைதானத்தில் தோனி ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். சேப்பாக்கம் மைதானம் முழுவதும் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கிறது. ‘Thala Is Back’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திய ரசிகர்கள் தோனியை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். உங்கள் ஆதரவு எந்த அணிக்கு?

வாடிக்கையாளர்களுக்கு இன்று முதல் சிறப்பு சலுகையை வழங்குவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, பயனாளர்கள் ₹49க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 25GB டேட்டாவை பெறலாம் என அறிவித்துள்ளது. 2024 ஐபிஎல் தொடரையொட்டி இந்த சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, ஏர்டெல் நிறுவனம் ₹49க்கு ரீசார்ஜ் செய்தால், 20GB டேட்டா வழங்குவது குறிப்பிடத்தக்கது.

எய்ட்ஸ் நோய்க்கு காரணமான எச்.ஐ.வி கிருமியை மனித உடல்களில் இருக்கும் செல்களில் இருந்து நீக்கும் வழியை நெதர்லாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மரபணு திருத்த தொழில் நுட்பத்திற்கு 2020ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதே முறையை கடைபிடித்து, நமது செல்களில் இருந்து எச்.ஐ.வி பாதிப்பை நீக்கும் முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பேசிய அவர்கள், “தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற கூடாது என்ற நோக்கில் தலைவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். பாஜகவின் சூழ்ச்சி அரசியலை தேர்தல் ஆணையத்திடம் புகாராக தெரிவித்துள்ளோம். இதன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளோம்” என்றனர்.

தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். பாஜக கூட்டணியில் தருமபுரி தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தருமபுரி தொகுதியில் வேட்பாளராக அரசாங்கம் என்பவர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அன்புமணியின் மனைவி ‘சௌமியா’ போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு தொண்டர்களிடையே ஆதரவு இல்லாததால் வேட்பாளர் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

கோடை வெயில் தொடங்கும் முன்பே தமிழகத்தில் வெயில் வாட்டி வதைப்பதால் மக்கள் கடும் அவதியில் உள்ளனர். இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

கேரளாவில் நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த நடிகை அருந்ததி நாயர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஐசியூவில் உள்ள அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும், சிகிச்சைக்கு அதிகம் செலவாகுவதால் நிதியுதவி தேவைப்படுவதாகவும் அவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த அருந்ததி நாயர் கோமா நிலைக்கு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிஜு ஜனதா தளத்துடனான பாஜகவின் கூட்டணி முயற்சி தோல்வி அடைந்துள்ளது. ஒடிசாவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் ஒன்றாக நடைபெற உள்ளது. இதற்காக, அங்கு ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை பாஜக தலைமை துவங்கியிருந்தது. ஆனால், அதிக எண்ணிக்கையில் இடங்களை பாஜக எதிர்பார்ப்பதால், இந்த கூட்டணி முயற்சி தோல்வி அடைந்துள்ளது. இதனிடையே, பாஜக தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

பொன்முடி அமைச்சராக பதவியேற்ற நிகழ்வில் முதல்வரும், ஆளுநரும் சுவாரசியமாக பேசிக்கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு பொன்முடி ஆளுநர் மாளிகையில் அமைச்சராக பொறுப்பேற்றார். பதவியேற்பு முடிந்த நிலையில், ஆளுநரிடம் பேசிய முதல்வர், இங்கிருந்து நேரடியாக தேர்தல் பரப்புரைக்காக திருச்சி செல்கிறேன் என்றார். அதை கேட்ட ஆளுநர் ரவி, முதல்வரிடம் ஆல் த பெஸ்ட் என்று கூறினார்.
Sorry, no posts matched your criteria.