India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

➤ தேர்தலுக்காக 10,214 சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு
➤ கமலிடம் மனநல சோதனை நடத்த வேண்டும் – அண்ணாமலை
➤ மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார்
➤ ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை
➤ விவாகரத்து கோரி நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா மனு
➤ தோனியை வீழ்த்துவது கடினம் – கம்பீர்

மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியாவின் வரைபடமே மாறும் என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகல பிரபாகர் கூறியுள்ளார். மோடி அரசு மீண்டும் தொடர்ந்தால் அதன் பிறகு இந்தியாவில் தேர்தல் நடக்காது என அச்சம் தெரிவித்த அவர், நாடு முழுவதும் லடாக் – மணிப்பூர் போன்ற சூழ்நிலை உருவாகும் என எச்சரித்துள்ளார். முன்னதாக SBI தேர்தல் பத்திர ஊழல் உலகளாவிய ஊழல் என பிரபாகர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் தலையீட்டால் மணிப்பூர் சூழலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே வெடித்த மோதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது குறித்து தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர், “மணிப்பூரில் உள்ள முகாம்களில் வசிக்கும் மக்களுக்கான நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்றார்.

இரவு நேரங்களில் நாம் பழங்களை சாப்பிடுவது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்து தூக்கத்தை சீர்குலைக்கும் வாய்ப்பை ஏற்படுத்த கூடும். இது தவிர சூரிய அஸ்தமனத்திற்கு பின் நமது வளர்சிதை மாற்றம் குறையும். கார்போ ஹைட்ரேட்டுகளை எளிதில் ஜீரணிக்க முடியாது. எனவே சூரியன் மறைந்த பிறகு பழங்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இதே போல, இரவு உணவுக்கு பின் டீ, காபி, குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்ப்பது நல்லது.

அதிமுகவுக்கும், திமுகவுக்கும் மாறி மாறி வாக்களித்தது போதுமென பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். தர்மபுரியில் பாமக வேட்பாளர் செளமியா அன்புமணியை ஆதரித்து வாக்கு சேகரித்த அவர், “எங்கே பெண்களுக்கு பிரச்னை என்றாலும், என்னை விட அவர் தான் முதலில் சென்று இருப்பார். 57 ஆண்டுகளுக்கு மேலாக திமுக, அதிமுகவுக்கு வாக்களித்தும் நமது வாழ்க்கை அப்படியே தான் இருக்கிறது. எந்த விடியலும் இல்லை” என்றார்.

KKR அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் CSK அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. 138 ரன்கள் இலக்கை துரத்தி ஆடிய CSK அணியில் ருதுராஜ் 67*, ரச்சின் 15, மிச்செல் 25, தூபே 28, தோனி 1* ரன்கள் அடித்தனர். இதையடுத்து CSK 17.4 ஓவரில் இலக்கை அடைந்து வெற்றிபெற்றது. அரோரா 2, நரைன் 1 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் நடப்பு தொடரில் CSK 3 ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரி உள்பட 102 தொகுதிகளுக்கு முதல்கட்டமாக ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 1,625 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். இதில் 1,491 ஆண் வேட்பாளர்கள், 134 பெண் வேட்பாளர்கள் அடங்குவர்.

நவ கிரகங்களில் அரசனான சூரிய பகவான் ஏப்ரல் 13ஆம் தேதி மேஷ ராசியில் நுழைகிறார். ஏற்கெனவே அங்கு குரு பகவானும் இருப்பதால் மேஷம், கன்னி, விருச்சிகம், மகர ராசியினருக்கு பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டப் போகிறது. சுய தொழில் செய்வோருக்கு நல்ல லாபம், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பிரச்னை முடிவுக்கு வருவது, வெளிநாட்டில் வேலைக்கு செல்லும் யோகம் போன்ற பல்வேறு சுப பலன்கள் மேற்கண்ட ராசியினரை தேடி வரப் போகிறது.

கொல்கத்தா அணிக்கு எதிராக பொறுமையாக ஆடிவரும் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் அரை சதம் கடந்துள்ளார். இது நடப்பு ஐபிஎல் தொடரில் இவர் அடிக்கும் முதலாவது அரை சதமாகும். CSK அணி தற்போது வரை 12 ஓவர்கள் முடிவில் 96/1 ரன்கள் எடுத்துள்ளது. CSK வெற்றிபெற இன்னும் 42 ரன்கள் தேவை உள்ள நிலையில் கைவசம் 8 ஓவர்கள் உள்ளது. மிச்செல் 25* ரன்களுடன் களத்தில் உள்ளார். இன்று CSK வெற்றிபெறுமா?

வீட்டில் ‘அவசரம்’ எனக் கூறி அலுவலகத்தில் அனுமதி வாங்கி விரைவாக கிளம்பிய பெண், ஐபிஎல் போட்டியை பார்க்கச் சென்று மேனேஜரிடம் மாட்டிக்கொண்டுள்ளார். RCB அணியின் வெறித்தனமான ரசிகை கிரிக்கெட் பார்ப்பதற்காக இவ்வாறு செய்துள்ளார். ஆனால், மைதானத்தில் அவர் இருந்ததை அவரது மேனேஜர் டிவியில் பார்த்துள்ளார். அந்தப் புகைப்படத்தை மேனேஜர் அவருக்கு பகிரவே, அதை அந்தப் பெண் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.