India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

➤1241 – மங்கோலியப் படையினர் போலந்து மற்றும் ஜெர்மானியப் படைகளைத் தாக்கி தோற்கடித்தனர்.
➤1413 – ஐந்தாம் என்றி இங்கிலாந்து மன்னனாக முடி சூடினார்.
➤1440 – கிறித்தோபர் டென்மார்க் மன்னராக முடிசூடினார்.
➤ 2003 – பாக்தாத் நகரை அமெரிக்கக் கூட்டுப் படையினர் கைப்பற்றினர்.
➤ 2013 – ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 32 பேர் உயிரிழந்தனர்.

மோடிக்கு இணையான வேட்பாளர் எந்த கூட்டணியிலும் இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் வழங்கியுள்ள சின்னம் எங்களிடம் தான் உள்ளது என கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி ஏன் மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை எனக் கேள்வி எழுப்பிய அவர், அதிமுக அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடையும் என்றார். மேலும், திமுக, அதிமுக கூட்டணியில் பிரதமர் வேட்பாளர்கள் என்று யாரும் இல்லை எனவும் அவர் விமர்சித்தார்.

அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே என மோடி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்தியாவின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக அருணாச்சல் எப்போதுமே இருந்து வருவதாக தெரிவித்த அவர், அங்கு வளர்ச்சிப் பணிகள் காலை சூரியனை போல மிக வேகமாக நடந்து வருவதாகவும் தெரிவித்தார். முன்னதாக அருணாச்சலின் 30 பகுதிகளுக்கு சீனா பெயர் சூட்டியிருந்தது.

◾பால்: பொருட்பால்
◾அதிகாரம்: கேள்வி
◾குறள்: 418
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.
◾விளக்கம்:
இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்

33 ஆண்டு இடைவெளிக்கு பிறகு ’தலைவர் 171’ படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து ஷோபனா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஜோடி தளபதி படத்தில் கடைசியாக இணைந்து நடித்திருந்தனர். வரும் 22-ஆம் தேதி இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாக இருக்கிறது. படத்தின் பெயர் ‘கழுகு’ அல்லது ‘ஈகிள்’ என்று வைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலயங்களில் நாம் பிரகாரத்தைச் சுற்றுவதற்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும். அதன் விவரம் வருமாறு,
1. காலையில் பிரகாரம் சுற்றல் – நோய்கள் அகலும்.
2. பகலில் பிரகாரம் சுற்றல் – விருப்பங்கள் நிறைவேறும்.
3. மாலையில் பிரகாரம் சுற்றுதல் – பாவங்கள் விலகும்.
4. அர்த்த சாமத்தில் பிரகாரம் சுற்றுதல் – மோட்சம் கிடைக்கும்.

இன்று (ஏப்ரல் 09) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

பாஜக ஆட்சியை விட மோசமான ஆட்சி இதுவரை இந்தியாவில் நடைபெற்றதில்லை என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்தது அவர் பரப்புரை செய்தார். அப்போது, “இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் விலைவாசி உயர்வு முன் எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. இதை குறைக்க மோடி எதுவுமே செய்யவில்லை” என்று விமர்சித்தார். சிவகங்கையில் 1984இல் முதல்முறையாக போட்டியிட்டு அவர் எம்.பியானார்.

தோனிக்கு சிலை வைக்க வேண்டும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை – கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முன்னதாக ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு தோனியின் புகைப்படத்துடன் கூடிய பேனரை எடுத்துவந்த சிஎஸ்கே ரசிகர்கள், தோனிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இன்று (ஏப்ரல் 09) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
Sorry, no posts matched your criteria.