India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஹரியானாவைச் சேர்ந்த 9 வயது சிறுமி 75 கிலோ எடையை தூக்கி காண்போரை அசர வைத்துள்ளார். பஞ்ச்குலா பகுதியைச் சேர்ந்தவர் அர்ஷியா கோஸ்வாமி. இவர் ஜிம்மில் 75 கிலோ எடையை தூக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி 2 மில்லியன் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது. உடற்பயிற்சி ஆர்வலர்கள் பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மேற்கு வங்கத்தின் பாஜக வேட்பாளர் ககென் முர்மு, பிரசாரத்தின் போது பெண்ணுக்கு முத்தம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மோடியின் குடும்பம் என்று கூறிக்கொண்டு வாக்கு கேட்டு வரும் நபர்கள் செய்யும் வேலையை பாருங்கள் என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். தற்போது மால்டா வடக்கு தொகுதியின் எம்.பி.யாக இருக்கும் ககென் முர்மு, மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

திருவனந்தபுரம் பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் சமர்பித்த பிரமாணப் பத்திரத்தை சரிபார்க்குமாறு வருமான வரித்துறைக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ராஜீவ் சந்திரசேகர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் அவரது ஓராண்டு வருமானம் வெறும் ரூ.680 என குறிப்பிடப்பட்டிருந்ததால் காங்கிரஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. விவரங்கள் முறையாக இல்லாமல் இருந்தால், அவரது வேட்புமனு ரத்தாக வாய்ப்புள்ளது.

வனத்துறையால் கைது செய்யப்பட்ட கிளி ஜோதிடர்கள் செல்வராஜ், சீனிவாசன் விடுவிக்கப்பட்டனர். கடலூர் அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பாமக வேட்பாளர் தங்கர்பச்சான், அங்கிருந்த செல்வராஜிடம் கிளி ஜோதிடம் பார்த்தார். இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், கிளியை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

மலட்டுத்தன்மை கொண்ட ஆண்களின் குடும்பத்தினருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குழந்தைப்பேறு பிரச்னை கொண்ட ஆண்களின் பெற்றோர், சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், சிலருக்கு எலும்பு, திசு மற்றும் பெருங்குடல் புற்றுநோய் பாதிப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது. எனினும், தீவிர ஆய்வு நடந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் எனக் கணித்ததால் தான் கிளி ஜோசியர் செல்வராஜ் கைது செய்யப்பட்டுள்ளதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். தமிழக காடுகளில் மரங்கள், விலங்குகள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கும் திமுக அரசு, கிளி ஜோசியரிடம் தனது வீரத்தை காட்டியுள்ளதாக கண்டனம் தெரிவித்த அவர், பகுத்தறிவு பேசும் திமுகவால் ஜோதிடத்தில் நல்ல செய்தி கூறியதை தாங்கிக் கொள்ள முடியவில்லை என சாடினார்.

தேர்தலை காரணம் காட்டி ED விசாரணைக்கு வர முடியாது என கெஜ்ரிவால் கூறுவதை ஏற்க முடியாது என டெல்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்னை மத்திய அரசுக்கும், கெஜ்ரிவாலுக்குமானது இல்லை என விளக்கமளித்த கோர்ட், இது அமலாக்கத் துறைக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையிலான சட்டப் பிரச்னை எனக் கூறியுள்ளது. முன்னதாக ED கைது சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரிய கெஜ்ரிவாலின் மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு சென்ற அவர், ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அவரது மறைவு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், அரசியல் மட்டுமின்றி திரைத்துறையிலும் வரலாற்று முத்திரையை பதித்தவர் ஆர்.எம்.வீரப்பன் என புகழாரம் சூட்டியிருந்தார்.

காங்கிரஸ் கட்சி ராமரை அவமானப் படுத்திவிட்டதாக பிரதமர் மோடி மீண்டும் பேசியிருக்கிறார். உத்தர பிரதேசத்தின் பிலிபிட் நகரில் பிரசாரம் செய்த அவர், அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டையை காங்கிரஸ் புறக்கணித்ததாக குறிப்பிட்டுள்ளார். மதம் தொடர்பாக பிரசாரம் செய்யக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தின் விதி இருக்கும்போது பிரதமரே அதனை மீறுவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கெஜ்ரிவால் கைது சட்டப்படி தானே தவிர, தேர்தல் சமயம் என்பதற்காக அல்ல என டெல்லி ஐகோர்ட் கூறியுள்ளது. ED கைது செய்ததை எதிர்த்த வழக்கில், அவர் ஒரு முதலமைச்சர் என்பதால் சிறப்பு சலுகை கொடுக்க முடியாது எனத் தெரிவித்த கோர்ட், பொது வாழ்வில் இருப்பவர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. மேலும், கெஜ்ரிவால் மீதான கைது நடவடிக்கை சட்டவிரோதம் இல்லை எனவும் ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.