news

News April 10, 2024

ரொனால்டோவுக்கு ரெட் கார்டு

image

எதிரணி வீரரை தாக்கியதால் ரொனால்டோவுக்கு ரெட் கார்டு காட்டப்பட்டது. சவுதி அரேபியாவில் சவுதி சூப்பர் கோப்பை கால்பந்து போட்டி நடந்து வருகிறது. இதில் ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் அணி 1-2 என்ற கோல் கணக்கில் அல்-ஹிலாலிடம் தோற்றது. இதனால், ரொனால்டோ எதி ணி வீரர் அலி அல்புலாஹியை இடித்து கீழே தள்ளினார். இதனால் நடுவர் அவருக்கு ரெட் கார்டு அளித்தார். ரொனால்டோ இதுவரை 12 முறை ரெட் கார்டு பெற்றுள்ளார்.

News April 10, 2024

இன்றைய பொன்மொழிகள்

image

➤ பேசும்முன் கேளுங்கள்; எழுதும்முன் யோசியுங்கள்; செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்.
➤ சில வேளைகளில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.
➤ யாரிடம் கற்கிறோமோ அவரே நம் ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
➤ நாம் தலையசைக்குபோது தானும் தலையசைக்கும் நண்பன் நமக்குத் தேவையில்லை. அதற்கு நம் நிழலே போதும்.
➤ நோயைவிட அச்சமே அதிகம் கொல்லும்.

News April 10, 2024

கொடுங்கோல் ஆட்சியை நோக்கி நகர்கிறோம்

image

கொடுங்கோல் ஆட்சியை நோக்கி இந்தியா நகர்வதாக வயநாடு தொகுதி சிபிஐ வேட்பாளர் ஆனி ராஜா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் இதை ஏற்க மறுக்கிறது. இல்லை என்றால் ராகுல் இங்கு போட்டியிட வேண்டிய தேவை இருக்காது எனக் கூறினார். மேலும், தேசத்தில் பாசிசம் உச்சத்தை எட்டியுள்ளதால், அதனை அனைவரும் ஒன்றினைந்து முறியடிக்க வேண்டும் என்றார். ராகுலை எதிர்த்து போட்டியிடும் ஆனி ராஜா, சிபிஎம் மூத்த தலைவர் டி.ராஜாவின் மனைவி ஆவார்.

News April 10, 2024

திராவிட இயக்கத்தின் முன்னோடி ஆர்.எம்.வீரப்பன்

image

திராவிட இயக்கத்தின் முன்னோடி ஆர்.எம்.வீரப்பன் மறைவு அதிர்ச்சியை அளிப்பதாக இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். அரசியல், திரைத்துறை, தமிழ்த்துறை என அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்த அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. சத்யா மூவிஸைப் போல ஆர்.எம். வீரப்பனின் நினைவுகள் என்றும் நினைவில் இருக்கும் என்றார். ஆர்.எம். வீரப்பன் சத்யா மூவிஸை உருவாக்கி மிகவும் திறம்பட நடத்தி வந்தார்.

News April 10, 2024

வரலாற்றில் இன்று

image

➤1864 – முதலாம் மாக்சிமிலியன் மெக்சிக்கோவின் மன்னராக முடி சூடினார்.
➤1912 – டைட்டானிக் கப்பல் தனது கடைசி பயணத்தை இங்கிலாந்தின் சௌதாப்ம்டன் துறைமுகத்தில் ஆரம்பித்தது.
➤1985 – யாழ்ப்பாணம் காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
➤ 2006 – மீரட் நகரில் வணிகக் கண்காட்சி ஒன்றில் ஏற்பட்ட தீயில் 60 பேர் உயிரிழந்தனர்.
➤ 2016 – கொல்லம் கோவில் விழாவில் ஏற்பட்ட தீவிபத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலி

News April 10, 2024

திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது

image

திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். திமுக எம்எல்ஏக்கள், அமைச்சா்கள் செல்லும் வாகனங்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை செய்வதில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் வாகனங்களை அதிகாரிகள் சோதனையிடுவதாக அவர் குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்து, திமுகதான் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்ததாகவும் விமர்சித்தார்.

News April 10, 2024

உடல் சூட்டை விரட்ட இதை ஃபாலோ செய்யலாமே…

image

சிவப்பணு உற்பத்திக்கு பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். மோர், பனங்கற்கண்டு, வெங்காயம், மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும். சுண்டைக்காயை உணவில் சேர்த்தால் நாக்குப்பூச்சித் தொல்லை குறையும். சர்க்கரை வள்ளி கிழங்கு உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

News April 10, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

◾பால்: பொருட்பால்
◾அதிகாரம்: கேள்வி
◾குறள்: 418
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி
◾விளக்கம்:
கேள்வியறிவால்‌ துளைக்கப்படாத செவிகள்‌, (இயற்கையான துளைகள்‌ கொண்டு ஓசையைக்‌) கேட்டறிந்தாலும்‌, கேளாத செவிட்டுத்‌ தன்மை உடையனவே.

News April 10, 2024

மகனின் தேர்தல் தோல்விக்காக காத்திருக்கும் தந்தை

image

பாஜக சார்பில் போட்டியிடும் தனது மகன் அனில் ஆண்டனி தோல்வி அடைய வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோனி விருப்பம் தெரிவித்துள்ளார். “காங்கிரஸ் தலைவர்களின் குழந்தைகள் பாஜகவில் இணையும் செயல் தவறானது. காங்கிரஸ் தான் பாஜகவின் மதவாதத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் கட்சி” என்றார். முன்னதாக கேரளாவின் பத்தனம்திட்டா தொகுதியில் பாஜக வேட்பாளராக ஏ.கே.அந்தோனியின் மகன் போட்டியிடுகிறார்.

News April 10, 2024

முதுகு வலியா? இதை முதலில் சரி செய்யுங்க…

image

குதிகால் வலி, முதுகு வலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க செல்ல வேண்டாம். நாற்காலியும், செருப்பும் கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா, நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா என்பதை கவனியுங்கள். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, 5 நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்து கொள்ளுங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.

error: Content is protected !!