India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 6ஆவது சுற்றுப் போட்டியில், தமிழக கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார். அஜர்பைஜானைச் சேர்ந்த நிஜாத் அபாசோவுக்கு எதிரான இப்போட்டியில், பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார். சிறு தவறு கூட செய்யாமல் கவனமுடன் விளையாடிய அவர், 45ஆவது நகர்த்தலில் நிஜாத்தை வீழ்த்தினார். இதனால் 3.5 புள்ளிகளுடன், புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்தில் நீடிக்கிறார்.

தமிழ்நாட்டில் இன்று வெப்ப அலை வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. உள்மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரையும், கடலோரப் பகுதிகளில் 33 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையும் வெயில் கொளுத்தும். சென்னையில் 35 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். இதனால், உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மதிய நேரத்தில் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் வெளியே வருவதை தவிர்க்கவும்.

காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகளில் செய்த பணிகளை 10 ஆண்டுகளில் மோடி தலைமையிலான அரசு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கூட்டத்தில் பேசிய அவர், அரசியலமைப்பு சட்டத்தை 80 முறை காங்கிரஸ் உடைத்து உள்ளதாகவும், இதுபெரிய பாவம் என்றும் விமர்சித்தார். சாதி, மதம், மொழி அடிப்படையில் யாரும் உயர்வானவர் இல்லை, தகுதியே ஒருவரை உயர்வானராக்குகிறது என்றும் கட்கரி குறிப்பிட்டார்.

பிட் புல் உள்ளிட்ட 23 இன நாய்களுக்கு மத்திய அரசு விதித்த தடையை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என அடையாளம் காணப்பட்ட 23 இன நாய்களுக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், உரிய ஆலோசனைக்கு பிறகு, புதிதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கலாம் எனக் கூறி, தடையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

பெங்களூரு-மும்பை இடையேயான 25ஆவது ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள பெங்களூரு அணி, புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியிலாவது வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் முன்னேறுமா? என பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். தோல்வியில் இருந்து மீண்டுள்ள மும்பையுடன் மோதவுள்ளதால், விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், ராஜஸ்தானில் கடந்த 2014, 2019 தேர்தல்களைப் போல், இந்த முறை பாஜக க்ளீன் ஸ்வீப் அடிக்க முடியாது என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக மோடி – அமித்ஷாவின் சோந்த ஊர் மற்றும் பாஜக கோட்டையாக கருதப்படும் குஜராத்தில் NDA : 21-23, INDIA: 3-5, ராஜஸ்தானில் NDA: 17 -19, INDIA: 6 -8 இடங்களில் வெற்றி பெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதை அறிந்த பாஜக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளதாம்.

தேர்தலில் வென்று இபிஎஸ் என்ன பிரதமராக போகிறாரா? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். கொடநாடு வழக்கில் தன்னை கைது செய்யக் கூடாது என்பதற்காக திமுகவுடன் இபிஎஸ் கள்ளக் கூட்டணி வைத்துள்ளார் என்று குற்றம் சாட்டிய அவர், எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் அதிமுக வெற்றிபெறாது என்றார். மேலும், என் பெயரை கூட சரியாக கூற வராத அவர், என்னை பச்சோந்தி என்று கூறுவது வெட்கக்கேடானது என்றும் விமர்சித்தார்.

தேர்தல் பத்திர சர்ச்சையில் சிக்கிய லாட்டரி கிங் மார்ட்டினுக்கு எதிரான ED வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஏற்கெனவே தனக்கு எதிராக CBI பதிவு செய்த வழக்கு விசாரணை முடியும் வரை, ED விசாரிக்கக் கூடாதென உத்தரவிடக்கோரி மார்ட்டின் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ED விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

நோன்புக் கடமைகளை முடித்து, ஈகைப் பண்பு சிறக்க ரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகள். இல்லாதோருக்கு உதவுவதையும் அனைவரிடத்தும் அன்பு செலுத்துவதையும் போதித்து, மனித குலத்துக்கு மகத்தான எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நபியடிகள். அனைவருக்கும் உதவி செய்யும் இந்த நாளை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு இன்று பொதுவிடுமுறை அறிவித்துள்ளது.

குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வத்தை குலதேவதை என்றும் அழைப்பர். குடும்பத்தில் ஒரு கஷ்டம் எனில், கூப்பிட்ட குரலுக்கு ஏன் கூப்பிடாமலே கூட வந்து உங்கள் துக்கங்களை போக்குவது உங்கள் குலதெய்வமே. ஆண்டுக்கு ஒருமுறையாவது குலதெய்வ கோயிலுக்கு சென்று வரவேண்டும். ஆறு பெளர்ணமிகள் தொடர்ந்து குலதெய்வ வழிபாடு செய்து வந்தால் கடன் தொல்லைப் படிப்படியாகக் குறையும் என்பது ஐதீகம்.
Sorry, no posts matched your criteria.