news

News April 15, 2024

தவறாக வழிநடத்தப் பார்க்கிறார் மோடி

image

நாட்டின் பன்முகத்தன்மையை பிரதமர் மோடி புரிந்துகொள்ளவில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நீலகிரியில் பரப்புரை மேற்கொண்ட அவர், ஜனநாயகத்தை காக்க பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும், ஒரு நாடு, ஒரு தலைவர் என மோடி தவறாக வழிநடத்தப் பார்ப்பதாக கூறிய அவர், பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஏழை மக்களுக்கு எந்த திட்டமும் இல்லை என்றும் சாடினார்.

News April 15, 2024

நடிகர் சுந்தர்.சி பாஜகவுக்கு ஆதரவு

image

நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். பாஜக நிர்வாகி குஷ்புவின் கணவரான இவர், 2021 சட்டசபைத் தேர்தலில் மனைவிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். இதனிடையே, குஷ்பு தனது உடல்நிலையை காரணம் காட்டி தேர்தல் பிரசாரத்தில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில், எந்த கட்சியும் சாராத சுந்தர்.சி தற்போது பாஜகவுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

News April 15, 2024

I.N.D.I.A அணியை ஆட்டுடன் ஒப்பிட்ட அண்ணாமலை

image

I.N.D.I.A அணி தலைவர்கள் இல்லாத கூட்டணி என அண்ணாமலை விமர்சித்துள்ளார். பல்லடத்தில் அவர் தனக்கு ஆதரவு திரட்டி பரப்புரையில் ஈடுபட்டார்.
10 செம்மறி ஆடுகள் ஒன்றாக இருந்தால் கூட தனக்கான தலைவனை தேர்ந்தெடுக்கும். ஆனால், I.N.D.I.A கூட்டணியால் அதுகூட முடியவில்லை என்று விமர்சித்த அவர், திமுக போல் தொகுதிக்கு ஒளித்து வர மாட்டேன், வாக்குறுதிகளை நிறைவேற்றி கெத்தாக வருவேன் என்றும் தெரிவித்தார்.

News April 15, 2024

தங்கம் விலை அதிகரிக்கவே செய்யும்

image

தங்கம் விலை குறையாது, தொடர்ந்து அதிகரிக்கவே செய்யும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். கடந்த 2 மாதங்களில் தங்கம் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றத்தால் மேலும் விலை அதிகரிக்கக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது. இதை உறுதிப்படுத்துவது போல சந்தை நிபுணர்களும், விலை தொடர்ந்து அதிகரிக்கவே செய்யும் என்று கணிப்பு வெளியிட்டுள்ளனர்.

News April 15, 2024

தோல்வியில் இருந்து பாடம் கற்குமா RCB

image

தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் RCB, இன்று SRH-ஐ எதிர்கொள்கிறது. SRH 250 ரன்கள் மேல் குவித்து, ஏற்கெனவே தனது பேட்டிங் திறமையை நிரூபித்துள்ளது. ஆனால், RCB-யில் அப்படி இல்லை; கோலியை தவிர மற்ற வீரர்களின் ஆட்டம் மோசம்; குறிப்பாக பந்துவீச்சும் டெத் ஓவர்களில் சரியாக எடுபடவில்லை. இதையெல்லாம் சரி செய்தால் தான் இன்றைய போட்டியில் வெல்ல முடியும்.

News April 15, 2024

மோடியும் சிறையில் இருந்திருப்பார்: ப.சி தாக்கு

image

சிவகங்கையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட ப.சிதம்பரம், எங்களது ஆட்சியில் ( காங்.,) முதல்வர்களை கைது செய்திருந்தால் மோடியும் சிறையில் தான் இருந்திருப்பார் என தெரிவித்துள்ளார். முதல்வர்களை கைது செய்யலாம் என்ற சட்டத்தைப் படித்த மோடி, சட்டத்தை ஆயுதமாக்கி ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்துள்ளார் என விமர்சித்த அவர், மோடியின் ஆட்சியில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கும் ஒன்றும் செய்யவில்லை என்றார்.

News April 15, 2024

அந்தமான் தீவின் ஒரு பகுதி மியான்மருக்கு தாரை வார்ப்பு

image

அந்தமான் தீவின் ஒரு பகுதியை மியான்மருக்கு நேரு தாரை வார்த்து விட்டதாக அங்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர் பிஸ்னு பதா ராய் குற்றம்சாட்டியுள்ளார். கச்சத்தீவை இலங்கைக்கு இந்திரா காந்தி தாரை வார்த்து கொடுத்து விட்டதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், ராய் அளித்துள்ள பேட்டியில், அந்தமானின் வடக்குப்பகுதி தீவான கோகோ தீவை மியான்மருக்கு பரிசாக நேரு அளித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

News April 15, 2024

1.5 கோடி பார்வைகளை கடந்த ‘விசில் போடு’

image

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘G.O.A.T’ திரைப்படத்தின் முதல் பாடல் நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையில், விஜய் குரலில் வெளியான இந்த பாடல் ரசிகர்களிடம் கலவையான வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்பாடல் வெளியான 16 மணி நேரத்திற்குள் 10 லட்சம் லைக்ஸ் மற்றும் ஒன்றரை கோடி பார்வைகளை கடந்து யூட்யூபில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

News April 15, 2024

Rs.1000.00 Credited.. உங்களுக்கு வந்துருச்சா திமுக பரப்புரை

image

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என்று அனைத்து கட்சிகளும் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில், இன்று காலை தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 செலுத்தப்பட்டது. இது தேர்தல் நேரம் என்பதால், பெண்களின் வாக்குகளை குறிவைத்து, தற்போது, மகளிர் உரிமைத்தொகை செலுத்தப்பட்டதை திமுக தனது தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்தியுள்ளது.

News April 15, 2024

புதுவையில் பரப்புரையில் ஈடுபடும் கார்கே, ஜே.பி நட்டா

image

புதுவையில் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கார்கே மற்றும் ஜே.பி.நட்டா இன்று பரப்புரையில் ஈடுபடுகிறார்கள். புதுவை காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து தட்டான் சாவடி பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கார்கே பங்கேற்கிறார். பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து அண்ணா சிக்னல் முதல் அஜந்தா சிக்னல் வரை ரோடு ஷோ நடத்த உள்ளார் ஜே.பி.நட்டா. இதனால் புதுவையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

error: Content is protected !!