India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலை விரித்தாடுவதாக அதிமுக பொது செயலாளர் இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், தமிழ்நாட்டில் போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகரித்து விட்டதாகவும், அத்தியாவசியப் பொருள்களின் விலை பலமடங்கு உயர்ந்து விட்டதாகவும் விமர்சித்தார். ஊழல் இல்லாத துறையே இல்லை என்ற நிலையே இருப்பதாகவும் இபிஎஸ் குற்றம்சாட்டினார்.

அதிமுகவுடன் கூட்டணி வைத்து எஸ்.டி.பி.ஐ-யும், பாஜக உடன் கூட்டணி வைத்து அமமுகவும் தேர்தல் களத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், அக்கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். எஸ்டிபிஐ கட்சியின் மாநில முன்னாள் பொருளாளர், அமமுகவின் மத்திய சென்னை எம்ஜிஆர் மன்ற செயலாளர் முகமது ரபீக் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில், நடிகர்கள் ஜெயம் ரவியும், துல்கர் சல்மானும் மீண்டும் இணைந்துள்ளனர். சமீபத்தில் கால் ஷீட் அமையாததால் படத்தில் இருந்து இருவரும் விலகிய நிலையில், தற்போது மீண்டும் இணைந்துள்ளனர். மேலும், இப்படத்தில் நடிகர் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு, செர்பியாவில் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.

நடப்பு ஐபிஎல் தொடரில் 3 முறை 250க்கும் அதிகமான ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 5 முறை 250க்கும் அதிகமான ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2008-2023 காலகட்டத்தில் 2 முறை மட்டுமே 250க்கு மேற்பட்ட ரன்கள் அடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நடப்பு ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் இரண்டு முறையும் (277, 287), கொல்கத்தா ஒருமுறையும் (272) அந்த சாதனையை படைத்திருக்கின்றன.

அன்புமணி எம்.பி பதவி பெற்றது தொடர்பாக இபிஎஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்து அவர்களிடம் பிச்சை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதாக அன்புமணி சொல்கிறார்கள். அப்படி, அவருக்கு (அன்புமணி) நாங்கள் போட்ட பிச்சைதான் அந்த எம்.பி பதவி. பதவியை வாங்கிக்கொண்டு எங்களை விமர்சிக்கிறார்கள் என அவர் கூறினார். மேலும், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அதிமுக அரசு உத்தவிட்டதாகவும் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணிக்கு தெலுங்கு சமுதாய மக்களின் அமைப்பான “தமிழ் தெலுங்கு தேசிய கட்சி” முழு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் ஈவிஎஸ். ராஜகுமார் நாயுடு அறிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் ஓரிரு தினங்களே இருப்பதால், இறுதிக்கட்ட பரப்புரை தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையில் அரசியல் கட்சிகள், வாக்குவங்கி இருக்கும் சமூகத்தை தங்கள் பக்கம் இழுத்து வருகின்றன.

“GSTவரி அல்ல… வழிப்பறி” என்ற தலைப்பில் பாஜக அரசையும், பிரதமர் மோடியின் செயல்பாட்டையும் முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். ஒரு டிவி சேனலில் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என ஸ்டாலினுக்கு சரத்குமார் சவால் விடுத்துள்ளார். ஒருவாரம் அவகாசம் தருகிறேன்; ஜிஎஸ்டி குறித்து நன்கு படித்துவிட்டு விவாதத்திற்கு வரட்டும் என்று சூளுரைத்துள்ளார்.

திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினுக்கு அரசியலில் அவரது மருமகன் சபரீசன் பக்க பலமாக இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தல்களில் திமுக கூட்டணி அமைத்தது, வெற்றி பெற்றதில் சபரீசனின் பங்கு அதிகம் உண்டு. அதேபோல், இந்தத் தேர்தலிலும் சபரீசனின் பங்கு அதிகம் உண்டு என்று திமுகவினர் கூறுகின்றனர். இதை வைத்து, இந்தத் தேர்தலிலும் அவரது வியூகம், வெற்றியைத் தருமா என்ற எதிர்பார்ப்பில் திமுகவினர் உள்ளனர்.

எதிர்க்கட்சி தலைவர்கள் செல்லும் ஹெலிகாப்டரில் மட்டும் அதிகாரிகள் சோதனை நடத்துவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி இந்தியா முழுவதும் தேர்தல் பரப்புரைக்கு செல்கிறார். ஆனால், இதுவரை ஒரு முறை கூட அவரின் வாகனத்திலோ அல்லது அமித்ஷாவின் வாகனத்திலோ எவ்வித சோதனையும் நடைபெறவில்லை. அவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தென்மேற்கு பருவமழை சராசரியை விட 6% அதிகம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஜூனில் தொடங்கும் பருவமழையில் நெல்லை, தென்காசி, குமரி, தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்யும். அண்மையில் கனமழையால் தென்மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிவிப்பு, அங்கு மீண்டும் கனமழை வாய்ப்பு இருப்பதையே காட்டுகிறது.
Sorry, no posts matched your criteria.