India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரக்கோணம் தொகுதியில் பொதுமக்களுக்கு பணப் பட்டுவாடா தடையின்றி நடைபெறுவதாக அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். அரக்கோணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் தோல்வி பயம் காரணமாக பணத்தை வெள்ளமாக வாரி இறைக்கிறார். இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ள அவர், திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை தேர்தல் ஆணையம் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்றார்.

தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை, #அக்கா1825 என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். 5 வருடங்களுக்கு 365 நாட்களும் பணியில் இருப்பேன் என உறுதியளித்த அவர், அம்மா உணவகம் போல் ரயில் நிலையங்களில் மோடி உணவகம், தென் சென்னையில் ஒவ்வொரு பேரவை தொகுதிக்கும் ஒரு கலை – அறிவியல் கல்லூரி, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பறவைகள் சரணாலயமாக மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

வாக்கு சேகரிப்பின் போது முதல்வர் ஸ்டாலின் சிறுவர்களுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார். வட சென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து கொளத்தூரில் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது மைதானம் ஒன்றில் சிறுவர்களுடன் சில நிமிடங்கள் கால்பந்து விளையாடினார். முதல்வரை கண்டதும் சிறுவர்கள் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்தனர். சிலர் தங்களது கால்பந்தில் அவரிடம் கையெழுத்து பெற்றுச் சென்றனர்.

மக்களவைத் தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரை தபால் வாக்கு செலுத்தாத முதியவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இன்று மாலை 5 மணி வரை வாக்குகளை செலுத்தலாம். அரசு ஊழியர்கள் சிலருக்கு அவர்களின் தொகுதியில் இருந்து பணியாற்றும் இடங்களுக்கு இதுவரை வாக்குச்சீட்டு வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், பாதிக்கப்பட்ட நபர்கள் எப்படி வாக்களிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

CSK அணியின் நட்சத்திர பவுலர் முஸ்தஃபிசூர், நாடு திரும்ப உள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். ZIM-BAN இடையேயான டி20 தொடர், வரும் மே 3ஆம் தேதி தொடங்க உள்ளது. இத்தொடருக்காக முஸ்தஃபிசூர் நாடு திரும்ப உள்ளதால், அவரை ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்குமாறு CSK & பிசிசிஐ கேட்டுக் கொண்டது. அதன்படி, மே 1ஆம் தேதி பஞ்சாபிற்கு எதிரான போட்டி வரை அவர் விளையாடுவார் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

அதிமுகவை பிளவுபடுத்த பாஜக எடுத்த பல்வேறு முயற்சிகளை முறியடுத்து இன்று நாம் ஒன்றுபட்டு வலுவாக இருக்கிறோம் என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார். வன்முறை வெறியாட்டங்களையும், வடக்கே இருந்து ஏவப்படும் விஷ அம்புகளையும் முறியடித்து வெற்றி பெற வேண்டும். வம்பு சண்டைக்குப் போவதில்லை; ஆனால், வந்த சண்டையை விடுவதில்லை. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று பாஜகவை நேரடியாக எச்சரித்துள்ளார்.

வாரணாசி தொகுதிக்கு வேட்பாளரை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் கூட்டணி அமைக்காமல் பகுஜன் சமாஜ் தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சி இன்று 11 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் மோடிக்கு எதிரான வேட்பாளராக அதார் ஜமால் லரியா என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது.

கொளுத்தும் வெயிலால் ஏற்படும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க தர்பூசணியை பலர் வாங்கி சாப்பிடுகின்றனர். அந்தப் பழத்தில் உடலுக்கு நன்மை தரும் பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. அவற்றை பற்றி தெரிந்து கொள்வோம் *இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்கிறது *கண் பார்வை குறைபாட்டை போக்கி அதை மேம்படுத்துகிறது *பல் ஈறுகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது * உதடுகள் வறண்டு போகாமல் தடுக்கிறது * உடல் சூட்டைத் தணிக்கிறது

ராகுல் காந்தி மீது அவதூறு பரப்ப வேண்டாம் என வில்லேஜ் குக்கிங் சேனல் தெரிவித்துள்ளது. இதய பாதிப்பு ஏற்பட்ட முதியவர் பெரியதம்பிக்கு உதவுமாறு சேனல் சார்பாக ராகுல் காந்தியிடம் உதவி கேட்டதாகவும், அதனை அவர் மறுத்ததாகவும் வதந்திகள் பரவி வந்தன. இதுகுறித்து விளக்கமளித்த சேனல், இது முற்றிலும் பொய். எங்கள் வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணா. பொய் செய்திகளை பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

தேமுதிக விருதுநகர் தொகுதி வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து அவரது சகோதரர் சண்முக பாண்டியன் வாக்கு சேகரித்தார். விருதுநகர் தொகுதிக்குட்பட்ட சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலைக்கு சென்ற அவர், அங்கு பணியாற்றுபவர்களிடம் ஆதரவு கேட்டார். தொழிலாளர்களுடன், தரையில் அமர்ந்து பேசிய அவர், இந்த முறை தனது அண்ணனுக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.
Sorry, no posts matched your criteria.