India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நடிகரும், இயக்குநருமான சமுத்திரகனி, சுப்பிரமணியபுரம், பாயும்புலி, வட சென்னை, ரஜினி முருகன் படங்களில் வில்லனாகவும், நாடோடி, சாட்டை, தொண்டன், டானில் குணச்சித்திர பாத்திரங்களிலும், காலாவில் காமெடியனாகவும் கலக்கினார். சாட்டை, டான் படங்களில் அவரின் நடிப்பு கண்கலங்க வைத்தது. இதுபோல தனி வழியை ஏற்படுத்தி, விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்கும் திறமை, சிலருக்கே அமையும். அது சமுத்திரகனியிடம் உள்ளது.

காங்கிரஸ் மாநிலத் தலைவராக உள்ள செல்வ பெருந்தகை, கட்சி சார்பில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அவருக்கு முன்பு மாநில காங்கிரஸ் தலைவர்களாக இருந்த கே.வி. தங்கபாலு, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவனையும், ப. சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்களையும் பிரசார களத்தில் காண முடியவில்லை. இதைக் கண்ட காங்கிரசார், பதவிக்கு மட்டும் வருவார்கள், பிரசாரத்துக்கு வர மாட்டார்களா என குமுறுகின்றனர்.

2023ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் இறுதித் தேர்வு முடிவுகளை (CSE) மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 3 கட்டங்களாக நடத்தப்பட்ட இந்தத் தேர்வில், 1016 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை upsc.gov.in மற்றும் upsconline.nic.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். இதில், ஆதித்ய ஸ்ரீவஸ்தவா, அனிமேஷ் பிரதான், டோனூரு அனன்யா ரெட்டி ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.

நடப்பு ஐபிஎல் தொடரில், பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது கடினம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். நடந்து முடிந்த 7 போட்டிகளில் 6இல் தோல்வி அடைந்துள்ள பெங்களூரு அணி, 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் (10ஆவது) உள்ளது. இதனால் எஞ்சியிருக்கும் 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே RCB அணி பிளே ஆஃப்க்கு செல்ல முடியும். மேலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளையும் நம்பி இருக்க வேண்டும்.

தென் தமிழகத்தில் இன்றும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நாளையும் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏப்.18 மற்றும் 19ம் தேதி தேர்தல் அன்றும் பரவலாக இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும். அதே நேரம், இன்று முதல் ஏப்.20ஆம் தேதி வரை வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரையும், உள் மாவட்டங்களில் 3-4 டிகிரி செல்சியஸ் வரையும் படிப்படியாக உயரும் எனவும் தெரிவித்துள்ளது.

தமது பெயர் அரவிந்த் கெஜ்ரிவால், தீவிரவாதி இல்லை என்று திகார் சிறையில் இருந்து எழுதிய கடிதத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், அங்கிருந்து கடிதம் எழுதியுள்ளார். அதை செய்தியாளர்களிடம் சஞ்சய் சிங் எம்பி வாசித்து காட்டினார். அதில் தனது பெயர் கெஜ்ரிவால், தீவிரவாதி இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரின் ஒரு சீசனில் 3 முறை 50+ ரன்களை விட்டுக்கொடுத்த முதல் இந்திய வீரர் என்ற மோசமான சாதனையைப் படைத்துள்ளார் ஹைதராபாத் அணியின் புவனேஸ்வர் குமார். இவர், 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராக 51, மும்பைக்கு எதிராக 53, பெங்களூருக்கு எதிராக 60 ரன்களை வாரி வழங்கியுள்ளார். இந்த 3 ஆட்டங்களிலும் அவர் விக்கெட் எதையும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோவையில் அண்ணாமலையை வெற்றிபெற வைக்கவே டம்மி வேட்பாளரை திமுக அறிவித்துள்ளதாக சீமான் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமரை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு முதல்வரும், உதயநிதியும் விளையாட்டு போட்டியை துவங்கி வைக்க பிரதமரை அழைக்கிறார்கள். உதயநிதியை தவிர வேறு எந்த விளையாட்டு அமைச்சரையாவது மோடி சந்தித்துள்ளாரா? என்று கேள்வி எழுப்பிய அவர், கனிமொழி வெற்றிக்காகவே தூத்துக்குடியை தமாகாவுக்கு பாஜக ஒதுக்கியது என்றார்.

2024 NEET PG தகுதித் தேர்வுக்கான விண்ணப்பம் பதிவு செய்யும் பணி இன்று மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. முதுநிலை மருத்துவ படிப்புக்காக நடைபெறும் NEET PG தகுதித் தேர்வு ஜூன் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பதிவு இன்று தொடங்கி மே 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்வு எழுத விரும்புவோர், natboard.edu.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக, தமிழகம் முழுவதும் நாளை முதல் 10,124 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. ஏப்.19 தேர்தல், வார விடுமுறை என தொடர்ந்து விடுமுறை வருவதால் சென்னை, கோவை, மதுரை, உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்யுங்கள்.
Sorry, no posts matched your criteria.