India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் பாஜக மகளிரணி செயலாளர் பானுப்ரியா, விவசாய அணி மண்டல தலைவர் சரவணக்குமார் உள்பட 85 பேர் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தமாகா சார்பில் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார். வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள நிலையில், பாஜகவினர் திமுகவுக்கு தாவியுள்ளனர்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பணிகளுக்கான நடைபெற்ற UPSC முதன்மைத் தேர்வில், தமிழக அளவில் பிரசாந்த் என்பவர் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். சென்னை மருத்துவக் கல்லூரியில் 2022ஆம் ஆண்டு இளங்கலை மருத்துவப் படிப்பை நிறைவு செய்த பிரசாந்த், தேசிய அளவில் 78ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தத் தேர்வில், பார்வை மாற்றுத்திறனாளிகள் 6 பேர் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 1,016 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிரதமர் மோடியின் காலரைப் பிடித்து கேட்காதவரை, அவர் மதவெறியையும், வெறுப்பையும் பரப்புவாரென நடிகர் கிஷோர் காட்டமாக விமர்சித்துள்ளார். தனது இன்ஸ்டா பக்கத்தில், ரஃபேல் முதல் தேர்தல் பத்திரம் வரை மோடியும், பாஜகவும் நமது பணத்தை சாப்பிட்டு விட்டு, யாரோ சாப்பிடும் இறைச்சி குறித்து கேள்வி கேட்கின்றனர். தேர்தல் நடத்தை விதிகளை மீறும் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட என்ன தகுதி இருக்கிறதென அவர் வினவியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 2 வெற்றி 4 தோல்விகளுடன் மும்பை அணி புள்ளிப் பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் மும்பை அணியின் சுமாரான பவுலிங்கே அந்த அணியின் தோல்விக்கு காரணம் என மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் லாரா கூறியுள்ளார். மேலும், இனி வரும் போட்டிகளில் மும்பை அணி வெற்றிபெற வேண்டுமென்றால் 2- 3 மேட்ச் வின்னிங் பவுலர்களை கண்டறிய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தபால் வாக்குகளை செலுத்தும் பணிகள் 5 மணியோடு நிறைவடைகிறது. நாடாளுமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்று தமிழ்நாட்டிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தல் பணிகளில் ஈடுபடுவோர், போலீஸார் ஆகியோரிடம் தபால் வாக்குகளை பெறும் பணிகள் இன்றோடு (ஏப்ரல் 16) நிறைவடையவுள்ளன. இந்த வாக்குகளும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படும்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியினர் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். வேறு எந்தக் கட்சியையும் பிரசாரத்திற்கு அனுமதிக்காத மக்கள், நாம் தமிழர் கட்சியினரை மட்டும் அனுமதித்திருக்கின்றனர். குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் நீதி கிடைக்காததால் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக அக்கிராமத்து மக்கள் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு குறித்து பல்வேறு மாநிலங்களிடம் தகவல் கோரப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. விஜயகாந்த் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முழுமையாக தகவல் கிடைத்த பிறகு நேரடியாக ஒளிபரப்புவது பற்றி முடிவு செய்யப்படும் என தமிழக அரசு கூறியது. இதையடுத்து, இறுதி முடிவை எடுக்க உத்தரவிட்ட கோர்ட், விசாரணையை ஜூன் 25-க்கு ஒத்திவைத்தது.

அரசியல் கட்சித் தலைவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் பணத்தை எடுத்துச் செல்வதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார். மதுராந்தகத்தில் நடந்த பிரசார கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ், பாஜகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டுமென கேள்வி எழுப்பினார். மேலும், தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் ஓட்டுக்கு காசு கொடுக்கவில்லை என்றால் ஓரிடத்தில் கூட டெபாசிட் வாங்க முடியாதென சாடினார்.

ஐபிஎல்லில் கொல்கத்தா அணி தவிர மற்ற அனைத்து அணிகளும் 6 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் RCB வீரர் விராட் கோலி (361) முதல் இடத்தில் உள்ளார். இதில் முதல் 15 இடங்களில் 2 CSK வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். 7ஆவது இடத்தில் ஷிவம் தூபே 242, 12 ஆவது இடத்தில் ருதுராஜ் 224 உள்ளனர். இதேபோல் பவுலர்களுக்கான பட்டியலில் முஸ்தஃபிசுர் 3, பதீரனா 9 ஆவது இடங்களில் உள்ளனர்.

தமிழகத்தில் ஏப்.21ஆம் தேதி மற்றும் மே 1ஆம் தேதி டாஸ்மாக் கடைகள், பார்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்.21இல் மஹாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. மே 1இல் உழைப்பாளர் தினம் என்பதால் அந்த 2 நாள்கள் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்.17, 18, 19ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.