news

News April 17, 2024

சிம்புவின் 50ஆவது படத்தை இயக்கும் சுதா கொங்கரா

image

நடிகர் சிம்புவின் 50ஆவது படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுதா சொன்ன ஒன்லைன் மிகவும் பிடித்துவிட்டதால், உடனே அவருடன் சேர்ந்து பணியாற்ற சிம்புவும் சம்மதித்ததாகக் கூறப்படுகிறது. சூர்யா நடிக்கவிருக்கும் ‘புறநானூறு’ படத்திற்குத் தயாராகி வரும் சுதா கொங்கரா, அந்தப் பணிகளை முடித்துவிட்டு சிம்பு படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகளையும் தொடங்குவார் எனச் சொல்லப்படுகிறது.

News April 17, 2024

கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்த பட்லர்

image

KKR அணிக்கு எதிரான 31ஆவது லீக் போட்டியில் சதம் அடித்த ஜோஸ் பட்லர் ஐபிஎல்லில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது ஐபிஎல் தொடரின் வரலாற்றில், அதிக சதங்கள் அடித்த வெளிநாட்டு வீரராக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெயில் (6 சதங்கள்) கருதப்பட்டார். ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்ற அவரது வாழ்நாள் சாதனையை நேற்றைய ஆட்டத்தில் அடித்த 7ஆவது சதம் மூலம் ஜோஸ் பட்லர் முறியடித்துள்ளார்.

News April 17, 2024

தினம் ஒரு திருக்குறள்!

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: கடவுள் வாழ்த்து ▶குறள் எண்: 4
▶குறள்:
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
▶பொருள்: விருப்பு வெறுப்பற்று, நிறைந்த மனதுடன் பிறர் துன்பம் களையும் தன்னலமற்ற மாமனிதரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.

News April 17, 2024

இதில் தான் திமுக ஆட்சி நம்பர்1!

image

லஞ்சம், ஊழல், கடன் வாங்குவதில் தான் இந்தியாவிலேயே நம்பர் ஒன் ஆட்சியாக திமுகவின் திராவிட மாடல் ஆட்சி இருந்து வருகிறதென இபிஎஸ் விமர்சித்துள்ளார். தருமபுரி பிரசாரத்தில் பேசிய அவர், சட்டப்பேரவைத் தேர்தலின்போது கவர்ச்சியான திட்டங்களை சொல்லி ஆட்சிக்கு வந்த பிறகு அந்த பல்டி அடித்து விட்டார்கள். தங்களை ஏமாற்றிய திமுக அரசாங்கத்துக்கு இந்த தேர்தலில் தகுந்த பதிலடி தர மக்கள் தயாராகிவிட்டதாகக் கூறினார்.

News April 17, 2024

அதிரடி மாற்றங்களுக்கு தயாரான தேவரகொண்டா

image

குஷி, லைகர் என அடுத்தடுத்து தோல்வியை தழுவிய படங்களால் இழந்த தனது மார்க்கெட்டை ‘தி ஃபேமிலி ஸ்டார்’ படம் மூலம் சரிசெய்யலாம் என நினைத்திருந்தார் விஜய் தேவரகொண்டா. மிகுந்த நம்பிக்கையுடன் அவர் எதிர்பார்த்திருந்த அந்தப் படமும் வெற்றி பெறவில்லை. இதனால் அவர் மிகவும் சோர்ந்து போய்விட்டாராம். கதைத் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்துவது போன்ற அதிரடி மாற்றங்களுக்கு தேவரகொண்டா தயாராகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

News April 17, 2024

சரிவை சந்தித்த சரக்கு வர்த்தக பற்றாக்குறை

image

இந்தியாவின் சரக்கு வர்த்தக பற்றாக்குறை கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு மார்ச் மாதத்தில் ₹1.29 லட்சம் கோடியாக சரிந்துள்ளது. வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்ட குறிப்பில், மார்ச் மாதத்தில் நாட்டின் சரக்கு ஏற்றுமதி ₹3.46 லட்சம் கோடியாகவும்; இறக்குமதி ₹4.75 லட்சம் கோடியாகவும் இருந்தது. சேவைகள் ஏற்றுமதி ₹2.37 லட்சம் கோடியாகவும்; இறக்குமதி ₹1.31 லட்சம் கோடியாகவும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 17, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஏப்ரல் 17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News April 17, 2024

தனி ஒருவராக வெற்றிக்கு வழிகோலிட்ட பட்லர்

image

KKR அணிக்கு எதிரான 31வது லீக் போட்டியில், தனி ஒருவராக அதிரடியாக ஆடிய ஜாஸ் பட்லர் RR அணிக்கு வெற்றியைப் பெற்று தந்துள்ளார். 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய RR அணியின் வீரர்கள் சஞ்சு, ஜெய்ஸ்வால், ஹெட்மயர் உள்ளிட்டோர் அடுத்தடுத்து விக்கெட் இழந்தனர். இந்நிலையில், இம்பேக்ட் வீரராக நின்று பேட்டிங் செய்த அவர், 55 பந்துகளில் 107 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு வழிகோலிட்டார்.

News April 17, 2024

இந்தியாவை தேர்வு செய்யும் முதலீட்டாளர்கள்

image

சீனாவை விட இந்தியாவில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் அதிக விரும்புவதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், சர்வதேச நிறுவனங்கள் வெளியிட்ட மதிப்பீடுகளின் எதிரொலியால் சீனாவின் சந்தை சரிவை சந்தித்தது. அதன் விளைவாக முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கினர். 2024 ஜன – மார்ச் வரையிலான காலத்தில் 25 பில்லியன் டாலரை முதலீடாக இந்திய பங்குகள் ஈர்த்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

News April 17, 2024

அண்ணாமலைக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்?

image

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நாடாளுமன்ற அரசியல் பற்றி என்ன தெரியும் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை பிரசாரத்தில் பேசிய அவர், “INDIA கூட்டணி பலவீனமாக இருப்பது போலவும், பிரதமர் வேட்பாளர் யார் எனவும் அரைவேக்காடு அண்ணாமலை கேட்கிறார். அரசியல் சாசனப்படி, INDIA கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி பிரதமரை தேர்ந்தெடுப்பர்” என்றார்.

error: Content is protected !!