news

News April 21, 2024

சோழர்கள் தங்கத்தின் தரத்தை கண்டறிந்தது எப்படி?

image

தற்போது தங்கத்தின் தரத்தை மதிப்பிட பல்வேறு கருவிகள் உள்ளன. ஆனால், சோழர்கள் காலத்தில் தங்கத்தை கண்ணால் பார்த்தும், கைகளால் எடுத்துப் பார்த்தும் அதன் தரத்தைக் கூறும் திறனாளிகள் இருந்துள்ளனர். அது பற்றி உத்திரமேரூரில் உள்ள கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சங்கரபாடியார்கள் என்பவர்கள் பொன்னின் தரத்தைச் சோதிக்கும் பணிகளை செய்து வந்ததாகக் கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளன.

News April 21, 2024

வாக்குப்பதிவை அறிய புதிய அப்ளிகேஷன்

image

தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் மாற்றி மாற்றி கூறுவதால் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அதற்காக புதிய அப்ளிகேஷனை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. VOTER TURNOUT APP என்று பெயரிடப்பட்டிருக்கும் இதனை ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் ஃபோன் பயனர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தொகுதிவாரியான வாக்குப்பதிவை இந்த அப்ளிகேஷன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

News April 21, 2024

முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கண்டனம்

image

திருவள்ளூர் அருகே விசாரணைக் கைதி உயிரிழந்தததை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்தில் காவல் மரணங்கள் அதிகரித்துள்ளதாக சாடினார். பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைக்கு உட்பட்டு நடக்குமாறும், அதற்கான உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.

News April 21, 2024

2024 IPL: இதுவரை சிறப்பாக விளையாடிய வீரர்கள்

image

▶அதிக ரன்கள் – விராட் கோலி (361) ▶அதிக விக்கெட்டுகள் – பும்ரா (13) ▶அதிக சிக்ஸர்கள் – ஹென்ரிக் க்ளாஸன் (26) ▶அதிக பவுண்டரிகள் – டிராவிஸ் ஹெட் (39) ▶அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் – விராட் கோலி (113(72)) ▶அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் – ரோமாரியோ ஷெப்பர்ட் (280.00) ▶சிறந்த எக்கனாமி – பும்ரா (5.96) ▶சிறந்த பந்துவீச்சு – பும்ரா (5/21) ▶அணியின் அதிகபட்ச ஸ்கோர் – ஹைதராபாத் (287/3) vs RCB

News April 21, 2024

விவசாயிகள் மீது பாஜக, காங்கிரசுக்கு அக்கறை இல்லை

image

விவசாயிகள் மீது பாஜக, காங்கிரஸுக்கு அக்கறை இல்லை என்று மாயாவதி விமர்சித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், மத்தியில் ஆட்சியில் இருந்தபோது விவசாயிகள் மீது காங்கிரஸ் சிறப்பு கவனம் செலுத்தவில்லை என்றும், பாஜகவும் அதுபோலவே இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். முதலாளித்துவ, மதவாத, சாதிய கொள்கைகளை பின்பற்றும் பாஜகவால், ஏழைகள், தலித்துகளுக்கு பயன் இல்லை என்றும் அவர் கூறினார்.

News April 21, 2024

நேரலையில் மயங்கி சரிந்த செய்தி வாசிப்பாளர்

image

மேற்குவங்கத்தில் வெயிலை தாங்க முடியாமல், பெண் செய்தி வாசிப்பாளர் மயங்கி சரிந்துள்ளார். தூர்தர்சன் சேனலில் செய்தி வாசிப்பாளராக பணி புரிபவர் லோபமுத்திர சின்ஹா. நேரலையில் செய்தி வாசித்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி சரிந்தார். இதனால் டிவியை பார்த்து கொண்டிருந்த மக்கள் திடுக்கிட்ட நிலையில், வெயிலால் தாகமெடுத்தபோது தண்ணீர் குடிக்க முடியாத காரணத்தால் மயங்கி விட்டதாக தெரிவித்துள்ளார்.

News April 21, 2024

மாலை 5 மணி வரை மழை

image

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

News April 21, 2024

இரவிலும் வெப்பம்; தூக்கம் தொலைத்த மக்கள்

image

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்திலும் வெப்பம் தகிக்கிறது. பகல் நேரத்தில் கடும் வெயிலின் தாக்கத்துடன் அனல் காற்றும் வீசுகிறது. இதனால் மக்கள் சிரமத்தை சந்திக்கும் நிலையில், கடந்த சில நாள்களாக இரவிலும் வெப்பம் அதிகரித்துள்ளது. மின்விசிறியை பயன்படுத்தினாலும் புழுக்கம் நிலவுகிறது. இதனால் வீட்டில் ஏசி இல்லாதோர் தூங்க முடியாமல் இரவு நேரத்தில் தூக்கத்தை தொலைத்து தவிக்கின்றனர்.

News April 21, 2024

IPL: பெங்களூரு அணி பவுலிங்

image

கொல்கத்தா-பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. டாஸ் வென்ற பெங்களூரு அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள RCB அணி, புள்ளிப் பட்டியலில் அதல பாதாளத்தில் உள்ளது. அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெங்களூரு அணி, கொல்கத்தாவை அவர்களது மண்ணிலே வீழ்த்துமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

News April 21, 2024

CUET UG: தேர்வு அட்டவணை வெளியானது

image

மத்திய பல்கலைக் கழகங்களில் இளங்கலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான சி.யூ.இ.டி (CUET UG) தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, கணக்கியல், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் உள்ளிட்ட 63 தேர்வுகள், வரும் மே 15 முதல் மே 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. 380 நகரங்களில் நடக்கும் இந்த தேர்வுக்கு, 7,17,000 ஆண்கள், 6,30,000 பெண்கள் என 13.48 லட்சம் விண்ணப்பித்துள்ளனர். <>மேலும் விவரங்களுக்கு…<<>>

error: Content is protected !!