India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
33ஆவது ஒலிம்பிக் திருவிழா, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று இரவு 11 மணிக்கு தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதை, வீரர்கள் தங்களது வாழ்நாள் லட்சியமாக கருதுகின்றனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் உள்பட இந்தியாவிலிருந்து 117 வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். ஒலிம்பிக் போட்டிகளில் உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
‘தி கோட்’ படத்தின் இசையமைப்பு பணிகள் தொடங்கியுள்ளதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், யுவன் மேஜிக் தொடங்கியுள்ளதாக பதிவிட்டுள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ள நிலையில், வெங்கட் பிரபு இத்தகவலை பகிர்ந்துள்ளார். ஏற்கெனவே 2 பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், 3ஆவது பாடல் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில இயற்கையான செயல்முறைகளின் மூலம் முகத்தில் வழியும் எண்ணெய் சுரப்பை தவிர்க்கலாம். வெள்ளரிக்காயை தோல் சீவி முகம் முழுவதும் தடவி, மறுநாள் காலை வெந்நீரில் கழுவலாம். தக்காளியை நறுக்கி முகத்தில் தடவி 15-30 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரால் கழுவலாம். முட்டையின் வெள்ளை கருவை முகத்தில் தேய்த்து, காய்ந்த பின் கழுவலாம். இதை வாரத்திற்கு இரு முறை செய்யலாம் என சருமநல மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஐஃபோன் விலையை ஆப்பிள் நிறுவனம் குறைத்துள்ளது. அதன்படி, 15 ப்ரோ மேக்ஸ் மாடல் விலை ₹6,000 குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல, 15 ப்ரோ ₹5,100, எஸ்இ மாடல் ₹2,300 குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரான ஐஃபோன் 13, 14, 15 மாடல்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் செல்ஃபோன் சுங்க வரி 20%இல் இருந்து 15%ஆக குறைக்கப்பட்டுள்ளதால் செல்ஃபோன்களின் விலை கணிசமாக குறையும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
வங்கிகள், கல்வி நிலையங்கள் உள்ளிட்டவற்றில் 2ஆவது சனிக்கிழமை விடுமுறை விடப்படுவது ஏன் தெரியுமா? 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் அதிகாரி ஒருவரின் உதவியாளர், விடுமுறை நாள்களில் ஊருக்கு சென்று வயதான பெற்றோரை சந்தித்து வந்தார். சில சமயங்களில் அதுவும் சாத்தியமில்லாமல் போனது. இதை அறிந்த அந்த அதிகாரி, அவர் ஊருக்கு செல்ல ஏதுவாக 2ஆவது சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்கினார். அந்த வழக்கம் தற்போதும் தொடர்கிறது.
இருசக்கர வாகனம் ஓட்டும் போது பின் சீட்டில் அமர்ந்திருப்பவரிடம் பேசினால் அபராதம் விதிக்கும் திட்டத்தை அமல்படுத்த கேரள அரசு முடிவெடுத்துள்ளது. அதிகரித்து வரும் சாலை விபத்துகளை குறைக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கவனச்சிதறலை குறைக்கும் வகையில் இந்த விதியை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் சாத்தியக்கூறு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
சாப்பிட்ட பின் குறைந்தது 100 நடைகள் நடக்க வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இது உடலில் செரிமானத்தை அதிகரிக்கும் எனவும், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும் என்றும் கூறுகின்றனர். சர்க்கரை அளவை சீராக்கி, டைப் 2 நீரிழிவு நோயை தடுப்பதோடு, இதய நோய் அபாயத்தை குறைக்கும் எனக் கூறப்படுகிறது. அதே நேரம், சாப்பிட்ட உடனே வேகமாக நடக்காமல், மெதுவாக தொடங்கி வேகத்தை அதிகரிக்க அறிவுறுத்துகின்றனர்.
மத்திய பாஜக அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் தமிழகம் போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கும் வகையில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளதாகவும், இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பண முறைகேடு விவகாரத்தில், நடிகர் விஷால் படங்களுக்கு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்நிலையில், தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்றும் முடிந்தால் தடுத்து பாருங்கள் எனவும் விஷால் சவால் விடுத்துள்ளார். இன்னும் தியேட்டர் பராமரிப்பு கட்டணம் உள்பட பல விசயங்கள் தீர்க்கப்பட வேண்டி உள்ளதாகவும், உங்கள் வேலையை சரியாக செய்யுங்கள் எனவும் காட்டமாக கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.