India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகை நயன்தாரா சிம்புவை காதலித்ததும், பிறகு பிரிந்ததும் தெரியும். இந்த பிரிவுக்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நயன்தாரா, தாம் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு சிம்பு வந்தால் அவருடன் பேசுவதை தவிர்க்கிறார். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் நயன் கலந்து கொண்டபோது, சிம்பு அருகில் வந்து அமர்ந்ததாகவும், இதனால் சில நிமிடங்களில் நயன் சத்தமின்றி வெளியேறி விட்டதாகவும் கூறப்படுகிறது.
மத்திய பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் குறிப்பிட வேண்டுமென்றால் அதற்கு இடம்போதாது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். நிதி கொடுக்கவில்லை எனக் கூறிவிட்டு முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்லாதது சரியல்ல என்று விமர்சித்த அவர், நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்து அவர் கடமை தவறியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இக்கூட்டத்தை 10 மாநில முதல்வர்கள் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ₹5,557 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் 1,355 கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், ₹191.65 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் வங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், 8.436 கோயில்களில் ₹3,776 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை பிரீத்தி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்திய வீராங்கனை பிரீத்தி பன்வர், வியட்நாமை சேர்ந்த வோ தி கிம்மை எதிர் கொண்டார். இதில் பிரீத்தி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். 20 வயதான பிரீத்தி, கால் இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் கொலம்பியாவை சேர்ந்த யெனி அரியாசை சந்திக்கிறார். இந்த ஆட்டம் வரும் 31ஆம் தேதி நடக்கிறது.
ஆடி கிருத்திகையையொட்டி, நாளை (ஜூலை 29) திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் நாளை ஆடிக் கிருத்திகை விழா கொண்டாடப்பட உள்ளது. இதன்காரணமாக அங்கு நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 10ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஒரு பாத்திரத்தில் ஊற்றி லேசாகச் சூடு பண்ணுங்கள். அஸ்வகந்தா பொடியை அதில் சேர்த்து சூடானதும் 2 நிமிடங்களுக்கு பின் அடுப்பை அணையுங்கள். பின்னர் இக்கலவையை வடிக்கட்டி அப்படியே குளிர விடுங்கள். இந்த ஆயிலை வாரத்தில் 2 நாட்கள் தலையில் தடவி, பின்னர் அலசினால் முடி உதிர்வு நிற்கும் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
தலைமுடியில் மாற்றம் தெரிய 2 மாதங்கள் ஆகும்.
நாமக்கல்லில் முட்டை விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. 2 நாள்களில் மட்டும் 60 காசுகள் குறைந்து, ₹4.60ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆடி மாதம், வட மாநிலங்களில் முட்டை விற்பனை குறைந்ததன் காரணமாக அதிகளவில் தேக்கம் அடைந்ததாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர். இதனால், விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் கொள்முதல் விலையை குறைத்துள்ளதாகத் தெரிகிறது. தொடர்ந்து, சில்லறை விலையும் ₹5ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்பக புற்றுநோய்க்கு இந்தியாவில் 2014 முதல் தற்போது வரை 10 ஆண்டுகளில் 7,36,579 பெண்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவையில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோது இந்தத் தகவலை மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் பிரதாப் ராவ் ஜாதோ தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு 3,18,907 பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கும் சூர்யகுமார், இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு தகுதியானவர் என முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். பவுலர்களின் பலம், பலவீனங்களை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் பீல்டிங்கை செட்டிங் செய்யும் யுக்தியை சூர்யகுமார் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவர், பேட்டிங்கில் விளையாடுவதைப் போலவே அவருடைய கேப்டன்ஷிப்பும் இருக்க வேண்டும் என்றார்.
புதுச்சேரி எல்லைப்பகுதியான திருப்பனாம்பாக்கத்தில் அதிமுக வார்டு செயலாளர் பத்மநாதன் (43) வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கடலூரை சேர்ந்த இவர், கோயில் கலை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது இந்த பயங்கரம் நடந்துள்ளது. 2 சக்கர வாகனத்தில் வந்த அவரை, காரை மோதவிட்டு கீழே தள்ளி வெட்டிக்கொன்றுவிட்டு மர்ம கும்பல் தப்பியோடியுள்ளது. முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.