India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, 1000 போட்டிகளில் விளையாடி 609இல் வெற்றியும், 348இல் தோல்வியும் அடைந்துள்ளது. 9 போட்டிகள் சமனில் முடிந்துள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலியா, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் வென்ற அணி என்ற பெருமையை தன்வசப்படுத்தியுள்ளது. 2ஆவது இடத்தில் உள்ள இந்தியா, 1,055 போட்டிகளில் விளையாடி 559இல் வெற்றியும், 443இல் தோல்வியும், 9 போட்டிகள் சமனிலும் முடிந்துள்ளது.
தமிழகத்தில் 756 கோயில்களில் அன்னதான திட்டம் நடைமுறையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் ஆட்சியில், இந்துசமய அறநிலையத்துறையில் நடைபெறும் பணிகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், முதலில் 8 கோயில்களில் நாள்முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டதாகவும், இந்தாண்டு மேலும் 3 கோயில்களுக்கு அது விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸின் குத்துச்சண்டைப் பிரிவில் இளம் நடுவராக இந்தியாவைச் சேர்ந்த கபிலன் சாய் அசோக் (32) நியமிக்கப்பட்டுள்ளார். ஒலிம்பிக்ஸில் நடுவரான 4வது இந்தியர் & உலக சாம்பியன்ஷிப்பில் அதிகாரியாக பிரதிநிதித்துவப்படுத்திய முதல் இந்தியர் ஆவார். சர்வதேச குத்துச்சண்டை கவுன்சிலில் தலைவராக இருந்த அவர், 2 நட்சத்திர அந்தஸ்திலிருந்து, 3 நட்சத்திர அந்தஸ்துக்கு மிக விரைவாக முன்னேறிய ஒரே நடுவராக திகழ்கிறார்.
தருமபுரியில் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிரபல பிரியாணி கடைக்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல், அங்கிருந்த ஊழியரை சரமாரியாக வெட்டிக்கொன்றது. தொடர்ந்து, சிவகங்கை அருகே பாஜக பிரமுகர் செல்வகுமார் நேற்றிரவு மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்டார். இன்று அதிகாலை கடலூர் அருகே அதிமுக நிர்வாகி பத்மநாதன் வெட்டிக்கொல்லப்பட்டார். தொடர்ந்து, குமரி அருகே காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.
மின்னணு சரிபார்ப்புக் குறியீடு (EVC) என்பது 10 இலக்க எண் குறியீடாகும். ஆன்லைனில் IT வரியை தாக்கல் செய்பவரின் சரிபார்ப்பு செயல்முறைக்காக, வங்கி கணக்கு & டிமேட் கணக்கில் பதிவுசெய்யப்பட்ட இ-ஃபைலிங் போர்டல், செல்ஃபோன் எண் & மின்னஞ்சல் முகவரிக்கு இது அனுப்பப்படும். EVC ஆனது உருவாக்கப்பட்ட நேரத்திலிருந்து 72 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும். வரி தாக்கல் செய்பவரின் அடையாளத்தை சரிபார்க்கவும் இது உதவுகிறது.
நடிகர் அஜித், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகர் அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் அர்ஜுனின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை என்ற அளவுக்கு கொலை நகரமாக மாறியுள்ளதாக சாடிய அவர், அரசியல்வாதிகளுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், போதைப் பழக்கங்களால் தான் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சிவகங்கை அருகே பாஜக பிரமுகர் செல்வகுமார் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளராக பதவி வகித்த அவரை, நேற்றிரவு மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்துள்ளது. இதேபோல், கன்னியாகுமரி அருகே காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் இன்று காலை வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் நடக்கும் அடுத்தடுத்த கொலை சம்பவங்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நடிகர் தனுஷின் 41ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ‘குபேரா’ படத்தின் புதிய போஸ்டரை அப்படக்குழு வெளியிட்டுள்ளது. படக்குழுவின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில், “தனித்திறமை வாய்ந்த உன்னத கலைஞர் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து” என்று குறிப்பிட்டுள்ளது. டோலிவுட் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் பான் இந்தியப் படமாக உருவாகிவரும் இப்படத்தில் நாகர்ஜுனா, ரஷ்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
திமுகவை சேர்ந்த காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமிக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடைபெறுகிறது. திமுக கவுன்சிலர்கள் 22 பேர் மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில், இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. மாநகராட்சியில் மொத்தமுள்ள 52 கவுன்சிலர்களில், எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் சேர்ந்து 30க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக உள்ளதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.