news

News September 10, 2024

சச்சின் சாதனையை முறியடிப்பாரா முஷ்பிகுர்?

image

IND-BAN டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் சச்சினின் சாதனையை, முஷ்பிகுர் ரஹீம் முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சச்சின் 7 டெஸ்டில், 5 சதத்துடன் 820 ரன்கள் எடுத்துள்ளார். ரஹீம் 8 போட்டிகளில் விளையாடி 2 சதத்துடன் 604 ரன்கள் அடித்துள்ளார். சச்சின் சாதனையை முறியடிக்க மேலும் 217 ரன்கள் தேவை. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் வரும் 19ஆம் தேதி சென்னையில் நடக்கிறது.

News September 10, 2024

பிரச்னைகளுக்கு தற்கொலை தீர்வல்ல

image

வசதி, வாய்ப்புகள் அதிகரித்துள்ள அதே நேரத்தில், மக்களிடம் மன அழுத்தமும் அதிகரித்து வருகிறது. இது தற்கொலையை நோக்கி தள்ளுகிறது. பொருளாதாரம், உளவியல் சிக்கல்களால் தற்கொலை செய்து கொள்பவர்களும் உண்டு. பெரும்பாலானோர் சமூக அழுத்தங்களால் அந்த முடிவை நோக்கி தள்ளப்பட்டவர்களே. உலக தற்கொலை தடுப்பு தினத்தில் மன அழுத்தத்தில் இருப்பவர்களை அதில் இருந்து மீள உதவுவோம். பிரச்னை எதுவாயினும், தற்கொலை ஒரு தீர்வல்ல.

News September 10, 2024

₹2 லட்சம் வரை டாடா கார்கள் விலை தள்ளுபடி

image

டாடா நிறுவனம் கார்கள் விலையில் ₹2 லட்சம் வரை தள்ளுபடி செய்துள்ளது. நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா, விழாக்காலத்தை முன்னிட்டு விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் புது திட்டத்தை அறிவித்துள்ளது. “பெஸ்டிவல் ஆப் கார்ஸ்” என்ற அத்திட்டத்தின் கீழ் சஃபாரி, ஹேரியர் உள்ளிட்ட கார்களின் விலை அக். 31 வரை ₹2.05 லட்சம் வரை தள்ளுபடி செய்வதாக டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

News September 10, 2024

விளையாட்டு துளிகள்

image

➤அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சினெர் சாம்பியன் பட்டத்தை வென்றார். ➤இன்டர்கான்டினென்டல் கோப்பைக்கான கால்பந்து போட்டியில் 6 புள்ளிகளுடன் சிரியா கோப்பையை கைப்பற்றியது. ➤ நொய்டாவில் நடைபெற இருந்த NZ – AFG இடையிலான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்தானது. ➤லண்டனில் நடந்த SL அணிக்கு எதிரான டெஸ்டில் ENG அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது

News September 10, 2024

இந்தியா வளர்வதை சில சக்திகள் விரும்பவில்லை: RSS

image

இந்தியா வளர்வதை சில சக்திகள் விரும்பவில்லை என்று RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். புனேவில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், இந்தியா வளர்வதை விரும்பாத சக்திகள், தடைகளை உருவாக்குவதாகவும், ஆனால் அதைக் கண்டு பயப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்தார். சத்ரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலும், இதேபோன்ற சூழல் ஏற்பட்டதாகவும், அது முறியடிக்கப்பட்டது எனவும் கூறினார்.

News September 10, 2024

முதலீடுகளை குவிக்கும் முதல்வர்

image

ஜேபில் நிறுவனத்துடன் ₹2000 கோடிக்கான ஒப்பந்தம் CM ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. ஆப்பிள், சிஸ்கோ, HP நிறுவனங்களுக்கு மின்னணு உபகரணங்கள் விநியோகிக்கும் ஜேபில் நிறுவனத்தின் தொழிற்சாலை திருச்சியில் அமைவதால், சுமார் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, காஞ்சிபுரத்தில் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனம் ₹666 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

News September 10, 2024

NO PARKING BOARD: தனியார் கட்டட ஓனர்கள் மீது நடவடிக்கை

image

பொது இடங்களில் “நோ பார்க்கிங் போர்டு”, மணல் பை, பேரிகார்டு வைக்கும் தனியார் கட்டட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் இதுபோல போர்டு வைப்போர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கலான பொதுநல மனுவை ஐகோர்ட் விசாரித்தது. அப்போது, நோ பார்க்கிங் போர்டு குறித்த வழிகாட்டுதல்களை 2 வாரங்களில் வகுக்கும்படி போலீசைக் கேட்டுக் கொண்டது.

News September 10, 2024

இந்திய ஜனநாயகத்தின் கரும்புள்ளி ராகுல்: பாஜக

image

இந்திய ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் வகையில் ராகுல் காந்தி பேசி வருவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. வெளிநாட்டிற்கு சென்றால் என்ன பேசுவது என்றே அவருக்கு தெரியவில்லை என்றும், சீனாவுக்கு ஆதரவாக தனது கருத்துக்களை ராகுல் கூறி வருவதாகவும் விமர்சித்துள்ளது. இந்திய ஜனநாயகத்தின் கரும்புள்ளியாக ராகுல் இருந்து வருவதாகவும் சாடியுள்ளது. அமெரிக்கா சென்றுள்ள ராகுல், RSS, BJP குறித்து விமர்சித்து வருகிறார்.

News September 10, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி

image

*சீனா: ரஷ்யா & சீனாவின் ராணுவ படைகள் ஒகோட்ஸ்க் கடல் தீவில் கூட்டு ராணுவ போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. *சிரியா: மாஸ்யஃப் நகரில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 25 பேர் உயிரிழந்தனர். *வியட்நாம்: யாகி புயல் காரணமாக வடக்கு வியட்நாமின் 17 நகரங்களில் 130 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம். கிழக்கு தைமூர்: போப் ஆண்டவர் பிரான்சிஸ் கிழக்கு தைமூர் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

News September 10, 2024

தனித்துவ நாயகனுக்கு பிறந்தநாள்

image

வெற்றியையே அடைமொழியாக கொண்ட ‘ஜெயம்’ ரவி, முதல் படம் தொடங்கி தற்போது வரை பல விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், எம்.குமரன் ஆகிய படங்களில் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட அவர், பேராண்மை, PS, தனி ஒருவன் உள்ளிட்ட படங்களால் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கினார். இன்று தனது 44ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

error: Content is protected !!