India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெண்கள் ODI தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் (654 புள்ளி) 3 இடங்கள் முன்னேறி 9ஆவது இடத்திற்கு வந்துள்ளார். தீப்தி சர்மா (538 புள்ளி) ஒரு இடம் முன்னேறி 19வது இடத்திற்கு வந்துள்ளார். ஸ்மிருதி மந்தனா (728 புள்ளி) 4வது இடத்தில் உள்ளார். ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் தீப்தி சர்மா (378 புள்ளி) 4ஆவது இடத்தில் உள்ளார்.
நெத்திலி மீனை கழுவி, முள் நீக்கி சிறிது சிறிதாக நறுக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி, ப.மிளகாய், ரவை, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்க்கவும். இக்கலவையை மிக்ஸியில் அரைத்து, வடைமாவு பதத்திற்கு பிசையவும். வாணலியில் தே.எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவை வடைகளாக தட்டிப்போட்டு, இருபக்கமும் பொன்னிறமாக நன்கு வெந்ததும் எடுத்தால் சுவையான நெத்திலி வடை ரெடி.
2026ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுக உடன் தான் கூட்டணி என விசிக தலைவர் திருமாவளவன் உறுதிபட தெரிவித்தார். தொடர்ந்து, திமுக கூட்டணியில் விசிக இருந்து வருவதாகவும், கொள்கை கூட்டணியை விட்டுவிட்டு வேறு கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்ற தேவை தங்களுக்கு இல்லை எனவும் கூறினார். வேண்டுமென்றே சிலர் கூட்டணி குறித்து பொய் செய்திகளை பரப்புவதாகவும், அதனை தான் முற்றிலும் மறுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
2036 ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த விருப்பம் தெரிவித்து சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்திற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த விருப்பம் தெரிவித்து அக்.1ல் கடிதம் எழுதியதாக விளையாட்டுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. வரும் 2032-ஆம் ஆண்டுவரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடங்கள் இறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய, மாநில அரசுகளின் ஓய்வூதியதாரர்களின் வீட்டுக்கே தபால்காரர்கள் வந்து, டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழை பெறும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கு சேவைக் கட்டணம் ₹ 70. இதனை பெற விரும்புவோர் அருகில் உள்ள போஸ்ட் ஆஃபீஸை தொடர்பு கொள்ளலாம். இல்லையெனில், ‘postinfo’ செயலியை டவுன்லோடு செய்து பதிவு செய்யலாம். இதற்கான முகாம்கள் நவ. 1 முதல் தபால் அலுவலகங்களில் நடந்து வருகிறது.
₹2 – ₹10 லட்சம் வரை தனிநபர் கடன் கொடுக்கப்படும் என்பது போன்ற விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். புற்றீசல் போல் மொய்த்து வரும் கடன் நிறுவனங்கள், பெயரில் சைபர் குற்றவாளிகள் பலர் இப்படித்தான் வலைவிரிக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட தொகையை ‘பிராசஸிங்’ கட்டணமாக கட்டச் சொல்லி, பணத்தை பெறுகிறார்கள். அத்துடன் தொடர்பை துண்டித்து, காணாமல் போய்விடுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இன்று 10 மணிக்கு <<14533666>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) ரஷ்யா 2) Indian Institute of Technology 3) சி.பி.முத்தம்மா 4) ஆக.15, 1907 5) 14,000 பற்கள் 6) Anemometer 7) உமறுப் புலவர் 8) வாழ்வின் தோற்றம் பற்றிய ஆய்வு. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என கீழே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
விராட் கோலியின் பேட்டிங் ரெகார்ட் பலரும் அறிந்ததே. அவரின் கேப்டன்ஷிப் ரெகார்ட் எத்தனை பேருக்குத் தெரியும். ஆஸ்திரேலியா மண்ணில் பார்டர் – கவாஸ்கர் தொடரை தற்போது வரை வென்ற ஒரே இந்திய கேப்டன் விராட் கோலி தான். தோனியால் கூட இதை செய்ய முடியவில்லை. கோலியின் தலைமையில் தான் 42 மாதங்களுக்கு இந்திய அணி ICC டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. All Hail King Kohli..
சீமானால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக திருச்சி சூர்யா ஐகோர்ட் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், சீமான் குறித்து 15 ஆடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும், இதற்கு பழிவாங்கும் வகையில் சீமான், சாட்டை துரைமுருகன் தன் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறி, தனக்கும், குடும்பத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு கோரியுள்ளார். இம்மனு நாளை மறுநாள் விசாரணைக்கு வர உள்ளது.
அரசுக்கு எதிரான தீர்ப்புகளை வழங்குவது மட்டுமே நீதிமன்ற சுதந்திரம் கிடையாது என CJI சந்திரசூட் தெரிவித்தார். தேர்தல் பத்திரங்கள் தீர்ப்புக்கு பிறகு, நீங்கள் சுதந்திரமாக செயல்படுகிறீர்கள் என நீதிமன்றத்தை பாராட்டியவர்கள் பிற வழக்குகளின் தீர்ப்புகளை கண்டு விமர்சிப்பதாக வேதனை தெரிவித்தார். தற்போதைய சமூகவலைதள காலத்தில், Online Media-வை பயன்படுத்தி பல அமைப்புகளிடம் இருந்து அழுத்தம் வருவதாகவும் கூறினார்.
Sorry, no posts matched your criteria.