India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரயிலில் கன்பர்ம் டிக்கெட் போக RAC டிக்கெட் கிடைத்தாலும், பயணி தடையின்றி பயணம் செய்யலாம். ஆனால் படுக்கை வசதி தரப்படாது. அமர்ந்தபடி பயண தூரம் முழுவதும் பயணிக்கலாம். அதேநேரத்தில் அந்த டிக்கெட்டை ரயில் புறப்பட அரை மணி நேரத்திற்கு முன்பு கேன்சல் செய்தால் உரிய பிடித்தம் போல எஞ்சிய தொகை ரீபண்ட் தரப்படும். இல்லையேல் ரீபண்ட் கிடைக்காது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்க.
யுனிவர்சல் சோல்ஜர்(1992), ஹெர்குலஸ்: தி லெஜன்டரி ஜர்னி உள்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்தவர் ராபர்ட் ட்ரோபர். பிளட் கேன்சரால் பாதிக்கப்பட்ட அவர், ஸ்டம்செல் டிரான்ஸ்பிளான்ட் சிகிச்சை எடுத்தார். ஆனால், இது பக்கவிளைவு ஏற்படுத்தியதால் சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. திரைப் பிரபலங்கள் பலரும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
வீட்டு உபயோக கேஸ் வெடித்து உயிர் அல்லது பொருள் சேதம் ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டை பெற முடியும். அதற்கென குழு காப்பீடு போன்ற ஒரு காப்பீட்டை எண்ணெய் நிறுவனங்கள் எடுத்து வைத்திருக்கின்றன. அதன்படி கேஸ் வெடித்து தனிநபர் இறந்தால் ₹6 லட்சம் வரைக்கும் காப்பீடு கிடைக்கும். மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலோ, சொத்துகள் சேதமடைந்தாலோ முறையே தலா ₹2 லட்சம் வரை இழப்பீடு பெற முடியும். SHARE IT
சென்னையில் நடைபெற்ற DC அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் CSK அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்தது. அதனை சேஸ் செய்த சென்னை அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். இறுதியில் விஜய் ஷங்கர் (69), தோனி (30) இருவரும் களத்தில் நின்று போராடியும் இலக்கை தொட முடியவில்லை. CSK அணி 20 ஓவர்களில் 158 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஆயுதங்களை கீழே போட்டு அமைதி பாதைக்கு திரும்பும்படி நக்சலைட் தீவிரவாதிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், என்கவுன்ட்டரில் நக்சல்கள் கொல்லப்படுவதை யாரும் விரும்பவில்லை என்றார். நக்சல் தீவிரவாதம் இல்லாத கிராமத்திற்கு வளர்ச்சிப் பணிக்காக ரூ.1 கோடி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
IPL தொடரில் இன்றிரவு 7.30 மணி போட்டியில் ராஜஸ்தான் vs பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சண்டிகரில் நடைபெறும் இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், முதலில் ஃபீல்டிங் செய்ய முடிவு செய்திருக்கிறார். காயம் காரணமாக ராஜஸ்தான் அணியின் கேப்டன்சி பொறுப்பை ஏற்காமல் இருந்த சஞ்சு சாம்சன் இந்தப் போட்டியில் மீண்டும் கேப்டனாகியிருக்கிறார்.
தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பரிதவித்த CSK அணியை, விஜய் ஷங்கர் தனது அரை சதத்தால் காப்பாற்றியுள்ளார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 184 என்ற இமாலய இலக்கை துரத்தும் CSK அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். தற்போதைய நிலவரப்படி, CSK 16.4 ஓவர்களில் 116 எடுத்து விளையாடி வருகிறது. வெற்றி பெற 19 பந்துகளில் 68 ரன்கள் தேவை.
செய்ய முடியும். பெரும்பாலான முக்கிய வங்கிகள் இப்போது வாடிக்கையாளர்கள் தங்கள் கிரெடிட் கார்டுகளை UPI செயலிகளுடன் இணைக்க அனுமதிக்கின்றன. கிரெடிட் கார்டு விவரங்களை செயலியில் கொடுத்து, UPI Pin-ஐ கொடுத்தால் போதும். ஒரு பரிவர்த்தனையை செய்ய, ஒவ்வொரு முறையும் கிரெடிட் கார்டு விவரங்களைக் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. UPI மூலம் எளிதாக கார்ட் வரம்பிற்குள் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.
மெட்டபாலிசத்தை அதிகரிப்பதால், எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வதற்காக பலரும் க்ரீன் டீ குடிப்பார்கள். ஆனால், இந்த க்ரீன் டீயை அதிகமாக குடித்தால், அது பல உடல்நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். தலைவலி, சீரற்ற இதயத்துடிப்பு கல்லீரல் பாதிப்பு மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் வரலாம் என சுட்டிக்காட்டுகின்றனர். அளவுக்கு மிஞ்சினால் அனைத்துமே நஞ்சு தான்!
பாம்பனில் ரூ.550 கோடியில் கட்டப்பட்ட புதிய ரயில்வே பாலத்தை மோடி நாளை திறந்து வைக்கவுள்ளார். 1914இல் அங்கு கட்டப்பட்ட பாலத்திற்கு பதிலாக கடலில் 2.07 கி.மீ. தூரம் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் மைய பகுதியில் கடலில் கப்பல்கள் செல்ல அனுமதிக்கும் வகையில் தூக்கு பாலம் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. முந்தைய பாலத்தை விட இது 3 மீட்டர் உயரமானது. ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் மூலம் கட்டுமானம் நடந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.