news

News April 6, 2025

ராசி பலன்கள் (06.04.2025)

image

➤மேஷம் – வெற்றி ➤ரிஷபம் – நலம் ➤மிதுனம் – புகழ் ➤கடகம் – உயர்வு ➤சிம்மம் – முயற்சி ➤கன்னி – லாபம் ➤துலாம் – நன்மை➤விருச்சிகம் – சுகம் ➤தனுசு – பரிசு ➤மகரம் – சாந்தம் ➤கும்பம் – யோகம் ➤மீனம் – அமைதி.

News April 6, 2025

வக்ஃப் வாரிய மசோதா.. அடுத்து இனி என்ன?

image

வக்ஃப் வாரிய மசோதாவுக்கு நாடாளுமன்ற இரு அவைகளும் ஒப்புதல் அளித்துவிட்டன. இனி அதன்மீது என்ன நடக்கும் என தற்போது பார்க்கலாம். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பி வைக்கப்படும். அதற்கு அவர் ஒப்புதல் அளித்ததும், மசோதா சட்டமாகும். பிறகு அதை கெஜட்டில் மத்திய அரசு வெளியிடும். அப்போது சட்டம் அமலாகும் தேதியும் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

News April 6, 2025

தோனி ஓய்வில்லை.. பிளெமிங் உறுதி

image

தோனி தற்போதைக்கு ஓய்வில்லை என்று சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். தோனியின் பெற்றோர் சிஎஸ்கே இன்று விளையாடும் போட்டியை காண சென்னை மைதானத்திற்கு வந்தனர். இதை வைத்து அவர் இன்று ஓய்வு பெறக்கூடும் எனத் தகவல் வெளியானது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த பிளெமிங், அந்தத் தகவலில் உண்மையில்லை என்றும், தோனி இன்னும் சிறப்பாக விளையாடி வருகிறார் என்றும் கூறியுள்ளார்.

News April 5, 2025

ONOE அடுத்த தேர்தலில் அமல்? நிர்மலா சீதாராமன் விளக்கம்

image

ஒரே நாடு, ஒரே தேர்தல் (ONOE ) அடுத்த தேர்தலில் அமலாக இருப்பதாக வெளியாகும் செய்திகளை நிர்மலா சீதாராமன் மறுத்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலுக்காக ரூ.1 லட்சம் கோடி செலவிடப்பட்டதாகவும், ONOE அமலானால் பெரும் தொகையை சேமிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2034க்கு பிறகே ONOE அமல்படுத்தப்படும், சட்டப்பேரவை, மக்களவைக்கு மட்டுமே பொருந்தும், உள்ளாட்சி அமைப்புக்கு அல்ல என்றும் கூறியுள்ளார்.

News April 5, 2025

ONOE திட்டத்துக்கு கருணாநிதி ஆதரவு: நிர்மலா சீதாராமன்

image

ONOE திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆதரித்ததாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ONOE நாட்டுக்கு புதிதல்ல என்றும், 1960ம் ஆண்டுகள் வரை அமலில் இருந்ததுதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் நலனுக்காகவே ONOE திட்டம் கொண்டு வரப்படுவதாகவும், இதை கருணாநிதி ஆதரித்த நிலையில், அவரின் மகனும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் எதிர்ப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

News April 5, 2025

பிரபல நடிகர் சஹானா ஸ்ரீதர் காலமானார்

image

பிரபல நடிகர் சஹானா ஸ்ரீதர் (62) மாரடைப்பால் காலமானார். அழியாத கோலங்கள், ராஜவம்சம் உள்ளிட்ட படங்களிலும், தாமரை, சித்தி-2 உள்ளிட்ட டிவி தொடர்களிலும் நடித்துள்ளவர் சஹானா ஸ்ரீதர். சஹானா தொடரில் நடித்து பிரபலமானதால் சஹானா ஸ்ரீதர் என்று அழைக்கப்பட்டார். சென்னையில் வசித்த அவருக்கு இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஹாஸ்பிடலில் சேர்த்தபோது மாரடைப்பால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

News April 5, 2025

மன்மோகன் சிங் மனைவிக்கு பாதுகாப்பு குறைப்பு

image

மன்மோகன் சிங் மனைவிக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு குறைத்துள்ளது. மன்மோகன் சிங், அவரின் மனைவி குர்சரண் கெளருக்கு இருந்த பாதுகாப்பு அச்சுறுத்தலால் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. 2024 டிசம்பரில் மன்மோகன் மறைந்த பிறகும் இது நீடித்தது. அரசு ஆய்வில் அச்சுறுத்தல் குறைந்ததால், இசட் பிரிவாக பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி 36 கமாண்டோக்கள் பாதுகாப்பில் ஈடுபடுவர்.

News April 5, 2025

Recession வருகிறதா? கலக்கத்தில் ஐடி ஊழியர்கள்

image

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அதிரடி பொருளாதார நடவடிக்கைகளால், பொருளாதார மந்தநிலை (Recession) ஏற்படுமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது. ப்ரோக்கர் நிறுவனமான JP Morgan, Recession வாய்ப்பினை 60%ஆக அதிகரித்துள்ளது. ஒருவேளை பொருளாதார மந்தநிலை ஏற்பட்டால், உலகளவில் ஐடி நிறுவனங்கள் கடும் பாதிப்படையும். அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தலாம்.

News April 5, 2025

ஆட்டம் காணும் பஞ்சாபின் அடித்தளம்

image

ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி தொடக்கத்திலேயே மளமளவென விக்கெட்டுகளை இழந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 206 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதனை சேஸ் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 10 ரன்களிலும் மற்ற இருவர் தலா 0 & 1 ரன்களிலும் வெளியேறினர். 4 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 31/3 ரன்கள் எடுத்துள்ளது.

News April 5, 2025

25 முறை பலாத்காரம் செய்த பேட்மின்டன் கோச் SHOCKING!

image

பெங்களூருவில் 30 வயது பேட்மின்டன் கோச் ஒருவர், 16 வயது சிறுமியை 25 முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். கோச்சிங் வரும் சிறுமியை ஏமாற்றி, தன் அறைக்கு அழைத்து சென்று, பலாத்காரம் செய்வதையும், நிர்வாண போட்டோ, வீடியோ எடுப்பதையும் இந்நபர் வழக்கமாக வைத்துள்ளான். தற்போது பிடிபட்டுள்ள அவனின் போனில், பல சிறுமிகளின் நிர்வாண போட்டோக்கள் இருந்துள்ளது. பெற்றவர்கள் நம்பி அனுப்புகிறார்களே. இவனை என்ன செய்வது?

error: Content is protected !!