News August 20, 2024

அடுத்த பலாத்காரம் வரை காத்திருக்க முடியாது

image

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை வழக்கை இன்று தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அப்போது தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “இந்த வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யவே பல மணிநேரம் ஆகி இருக்கிறது. இந்த தாமதத்துக்கு யார் காரணம்? பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டியது அரசின் கடமை. மாற்றம் உடனே வேண்டும். அடுத்த பலாத்காரம் நடக்கும் வரை மாற்றத்திற்காக காத்திருக்க முடியாது” எனக் கடிந்து கொண்டார்.

Similar News

News January 21, 2026

BREAKING: திமுகவில் இணைகிறார்.. ஓபிஎஸ் அதிர்ச்சி

image

மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்த அதிர்ச்சியில் இருந்தே ஓபிஎஸ் இன்னமும் வெளியே வரவில்லை. இந்நிலையில், அவரது வலதுகரமாக விளங்கிய வைத்திலிங்கமும் திமுகவிற்கு தாவ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஸ்டாலின் முன்னிலையில் இன்று அவர் திமுகவில் இணைவார் என கூறப்படுகிறது. 2021-ல் ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு அவர் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

News January 21, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 587 ▶குறள்: மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று. ▶பொருள்: மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும்.

News January 21, 2026

விஜய்யை விளாசிய கருணாஸ்

image

திமுகவை தீய சக்தி என விமர்சிக்கும் விஜய் என்ன சக்தி என கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் முதலில் தமிழனாக இருக்க வேண்டும் என்றும், தமிழக மக்களுக்கு விரோதமாக செயல்படும் மத்திய அரசை கண்டித்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழக மக்களின் வாக்கு உங்களுக்கு வேண்டும், ஆனால் அவர்களின் வாழ்க்கை உங்களுக்கு வேண்டாமா எனவும் கருணாஸ் ஆவேசமாக தெரிவித்தார்.

error: Content is protected !!