News August 19, 2025
அரசியலமைப்பை மதிக்கும் வேட்பாளர்: கனிமொழி

RSS-யை சேர்ந்த ஒருவரை எதிர்க்கும் வகையில், சுதர்சன் ரெட்டியை தேர்வு செய்துள்ளதாக கனிமொழி விளக்கம் அளித்துள்ளார். மேலும், தங்கள் வேட்பாளர் அரசியலமைப்பு சட்டத்தை மதிப்பவர் எனவும் அவர்கள்(NDA) தேர்வு செய்த வேட்பாளர் யார் என உங்களுக்கே தெரியும் என்றார். இது சித்தாந்தங்களுக்கு இடையேயான மோதல் எனவும், TN-யை சேர்ந்தவர் வேட்பாளர் என்பதால் BJP-க்கு நம் மீது அக்கறை உள்ளதென அர்த்தமாகிவிடாது என்றும் கூறினார்.
Similar News
News December 14, 2025
இந்திய அணிக்கு 118 ரன்கள் மட்டுமே டார்கெட்!

3-வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி, 117 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகியுள்ளது. இந்திய அணி தரப்பில் பந்துவீச்சில் மிரட்டிய அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினர். இதனையடுத்து, 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்திய அணி ஈசியாக வெற்றிபெறுமா?
News December 14, 2025
சற்றுமுன்: அதிமுகவில் இணைந்தனர்

சென்னையில் EPS முன்னிலையில், தவெக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு கட்சித் துண்டு போர்த்தி EPS வரவேற்றார். அதிமுக ராஜ்ய சபா MP தனபால் ஏற்பாட்டில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. தேர்தல் பணிகளில் ஆர்வமுடன் பங்கெடுத்து அதிமுக வெற்றிக்கு உழைக்கும்படி, புதியதாக இணைந்தவர்களுக்கு EPS வேண்டுகோள் விடுத்தார்.
News December 14, 2025
மகளிர் உரிமைத் தொகை உயர்வு: ஸ்டாலின் அறிவிப்பு

மகளிர் உரிமைத்தொகை மேலும் உயரும் என கூறியிருந்தேன், அது நிச்சயமாக நடக்கும் என மீண்டும் CM ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்துள்ளார். டிச.12-ல் ₹1,000 மகளிர் உரிமைத்தொகை 2-ம் கட்ட விரிவாக்க நிகழ்வில் பேசிய ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகையும் உயரும், மகளிரின் உரிமையும் உயரும் என கூறியிருந்தார். இந்நிலையில், மீண்டும் ஒருமுறை அழுத்தமாக கூறியுள்ளதால் மிக விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.


