News August 5, 2024
ரயில் மற்றும் விமான சேவை ரத்து

வங்கதேசத்தில் வன்முறை வெடித்துள்ள நிலையில் கொல்கத்தாவில் இருந்து வங்கதேச தலைநகர் டாக்கா செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதேநேரம் டாக்காவிற்கு செல்லும், மற்றும் அங்கிருந்து வரும் அனைத்து ஏர் இந்தியா விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Similar News
News January 22, 2026
தமிழகத்தில் சிக்குன்குனியா பரவல் அதிகரிப்பு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிக்குன்குனியா பரவல் அதிகரித்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த ஹாஸ்பிடல்களுக்கு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. காய்ச்சல், இருமல், உடல்வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ஹாஸ்பிடலுக்கு செல்லுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொசு உற்பத்தியை தடுக்க வீடுகளில் நீர் தேங்காமல் தடுப்பது அவசியம்.
News January 22, 2026
சிறு, குறு தொழில்களுக்கு கடன் வழங்க நடவடிக்கை

மத்திய அரசு, இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கிக்கு (SIDBI) ₹5,000 கோடி பங்கு மூலதன ஆதரவை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இது, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) கடன் வழங்குவதை மேம்படுத்தவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும். இதனால், சொந்த தொழில் தொடங்குபவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News January 22, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 22, தை 8 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: சதுர்த்தி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.


