News October 11, 2025
திமுகவால் இதற்கு சத்தியம் செய்ய முடியுமா? நயினார்

இந்து மதத்தை இழிவுபடுத்தவில்லை என திமுகவினரால் சத்தியம் செய்ய முடியுமா என்று நயினார் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகம் கவர்னருடன் தான் போராடுகிறது என <<17948339>>உதயநிதி<<>> கூறியதற்கு கண்டனம் தெரிவித்த நயினார். RN ரவியை விமர்சிப்பதற்கு உதயநிதிக்கு என்ன தகுதியுள்ளது என்றும் காட்டமாக கேட்டுள்ளார். கவர்னர் மீது இனியும் வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்தினால் பாஜக வேடிக்கை பார்க்காது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Similar News
News December 13, 2025
2 போட்டிகளை வைத்து கில்லை எடை போட முடியாது: நெஹ்ரா

SA-க்கு எதிரான டி20 தொடரில் கில் சொதப்பி வருகிறார். இது குறித்து GT கோச் நெஹ்ராவிடம் கேட்டபோது, டி20 போன்ற மிக குறுகிய ஃபார்மெட்டில், 2 போட்டிகளில் விளையாடுவதை வைத்து ஒரு வீரரை எடை போட கூடாது என தெரிவித்துள்ளார். கில் சரியாக ஆடவில்லை என சாம்சன், அவரும் ஆடவில்லை என ருதுராஜ் என வீரர்களை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்க முடியாது என்றும் நெஹ்ரா கூறியுள்ளார்.
News December 13, 2025
₹1,020 கோடி ஊழல்.. “நேரு மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்”

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்று அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். நகராட்சி நிர்வாகத்துறையில் ₹1,020 கோடி ஊழலும், அரசுப் பணி வழங்க ₹888 கோடி லஞ்சமும் வசூலிக்கப்பட்டது பற்றி DGP-க்கு, ED துல்லியமான ஆதாரங்களை கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் சாடியுள்ளார். ஊராட்சி செயலாளர் தேர்விலும், DMK அரசு தகுதியான இளைஞர்களை நீக்கி மோசடி செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
News December 13, 2025
அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர் கைது

2023-ல் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கஸ் முகம்மாடியை ஈரான் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். சமீபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கறிஞர் கோஸ்ரோவ் அலிகோர்டியின் இறுதி சடங்கில் கலந்து கொண்டதால் முகம்மாடி கைது செய்யப்பட்டுள்ளார். ஈரானில் பெண்களின் உரிமைகளுக்காக போராடி 11 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வந்த முகம்மாடி, கடந்த 2024-ல் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார்.


