News August 22, 2024
இருளில் செல்போன் பார்க்கலாமா?

இருளில் செல்போன் பார்ப்பது சரியா, தவறா என சந்தேகம் இருக்கும். அதுகுறித்து கண் மருத்துவர்கள் என்ன தெரிவிக்கின்றனர் என பார்க்கலாம். பொதுவாக, இருளில் செல்போன் பார்ப்பது, அதிலுள்ள வாசகங்களை படிப்பது கண்ணுக்கு சோர்வை தரும். இதனால் கண்ணில் அழுத்தம் அதிகரித்து படிப்படியாக பார்வை பிரச்னையை ஏற்படுத்தும், ஆதலால் இருளில் செல்போன் பார்ப்பதை தவிர்க்கும்படி அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். SHARE IT
Similar News
News November 12, 2025
விலை தாறுமாறாக உயரப்போகிறது

சிமெண்ட் விலைகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மழைக்காலம், GST சீர்திருத்தம் உள்ளிட்ட காரணங்களால் சிமென்ட் விலை சராசரியாக ₹6 வரை குறைந்திருந்தது. தற்போது தேவை அதிகரித்துள்ளதால் நாடுமுழுவதும் சிமெண்ட் மூட்டைகளின் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு இதை உடனே ஷேர் செய்யுங்க..
News November 12, 2025
டெல்லி கார் வெடிப்பு: வெளியான பரபரப்பு தகவல்கள்

டெல்லி கார் வெடிப்பு வழக்கில் சிக்கிய தீவிரவாதிகளின் திட்டம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. முதன்முதலில் குடியரசு தினம் மற்றும் தீபாவளி அன்று மிகப்பெரிய குண்டுவெடிப்புகளை நிகழ்த்த இவர்கள் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதற்காக கைதான உமர் நபி மற்றும் உமர் முகமது ஆகியோர் செங்கோட்டையில் பலமுறை உளவு பார்த்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக NIA கைதான 9 பேரிடம் விசாரணை நடத்திவருகிறது.
News November 12, 2025
டெல்லியில் காற்று மாசு அவசர நிலை

டெல்லியில் காற்று தரக்குறியீடு 428 ஆக உயர்ந்து, இந்த ஆண்டின் மிக மோசமான மாசு நிலையை எட்டியுள்ளது. இது கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவு அதிக மாசு ஆகும். இதனால், டெல்லி முழுவதும் GRAP-3 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. *கட்டுமான, இடிப்பு பணிகளுக்கு தடை *BS-III பெட்ரோல் மற்றும் BS-IV டீசல் 4 சக்கர வாகனங்களுக்கு கட்டுப்பாடு *5-ம் வகுப்பு வரை பள்ளிகளில் Hybrid முறையில் வகுப்புகள் நடத்த உத்தரவு.


