News August 7, 2024
லைகா பெயரில் வரும் அழைப்புகள் பொய்

லைகா தயாரிப்பு நிறுவனம் சார்பில் நடிப்பதற்கு ஆள்கள் தேவை என்று சமீப காலமாக பல விளம்பரங்கள் இணையத்தில் வலம் வருகின்றன. இவை அனைத்தும் பொய் என்று லைகா நிறுவனம் தெளிவு படுத்தியுள்ளது. லைகா நிறுவனத்தால் தயாரிக்கப்படும் படம் மற்றும் அது தொடர்பான அனைத்து செய்திகளும் அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்படும் என்றும் மற்றவற்றை நம்ப வேண்டாம் என்று அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Similar News
News November 15, 2025
ரயில் விபத்துக்களை தடுக்க நவீன தொழில்நுட்பம்

2035-க்குள் அனைத்து ரயில்வே வழித்தடங்களிலும் ‘கவச்’ தொழில்நுட்பத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 5,900 கிமீ வரை ‘கவச்’ பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ரயில் எஞ்சின், தண்டவாளம், சிக்னலை இணைத்து இத்தொழில்நுட்பம் உருவாக்கப்படுகிறது. ஒரே தடத்தில் 2 ரயில்கள் வந்தால், தானாகவே பிரேக் பிடித்து ரயிலின் வேகத்தை குறைக்கும். அதேபோல், நிர்ணயித்த வேகத்தை விட அதிகமாக இயங்க அனுமதிக்காது.
News November 15, 2025
21 நாள்கள் இத சாப்பிடுங்க.. அப்புறம் பாருங்க!

வாழைப்பழங்களிலேயே செவ்வாழைப்பழத்தில் தான் அவ்வளவு நன்மைகள் கொட்டிக்கிடக்கிறது. இதனை 21 நாள்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் உண்டாகுமாம். கண் பார்வை மேம்படும், ஆண்மை குறைவு பிரச்னைகள் சரியாகும், பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீராகும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். தினமும் காலை உணவோடு செவ்வாழையை சாப்பிடுங்கள். அனைவருக்கும் SHARE THIS.
News November 15, 2025
சற்றுமுன்: தங்கம் விலை குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $105 குறைந்து $4,080-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று (நவ.14) தங்கம் விலை சவரனுக்கு ₹1,200 குறைந்து, ₹93,920-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்றும் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


