News October 11, 2025
Business Roundup: லாபம் கண்ட சிமெண்ட் கம்பெனிகள்

*ஜூலை முதல் செப். வரையிலான 2-வது காலாண்டில் இந்திய சிமெண்ட் கம்பெனிகளின் லாபம் 4% அதிகரித்துள்ளதாக கணிப்பு. *மறுசுழற்சி கச்சா பொருட்கள் மீதான 18% ஜிஎஸ்டி வரியை பூஜ்ஜியமாக குறைக்க மறுசுழற்சி தொழிலாளர்கள் கோரிக்கை. *தீபாவளி பரிசாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ₹799 4ஜி போனை அறிமுகம் செய்துள்ளது. *TCS நிகர லாபம் 2-வது காலாண்டில் ₹12,075 கோடியாக உயர்வு. *சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹100.90 விற்பனை.
Similar News
News November 12, 2025
PAK குண்டுவெடிப்புக்கு யார் காரணம்? உண்மை இதோ!

இஸ்லாமாபாதில் நடந்த குண்டுவெடிப்புக்கு இந்தியா காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. ஆனால், தாக்குதலுக்கு பாகிஸ்தானி தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நீதிபதிகள், வழக்கறிஞர்களை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியதாகவும், இஸ்லாமிய சட்டம் அமல்படுத்தப்படும் வரை பல தாக்குதல்கள் நடக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 12, 2025
RCB ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

கூட்ட நெரிசல் விவகாரம், RCB அணியை இக்கட்டான சூழலுக்கு தள்ளியுள்ளது. நடப்பு சாம்பியனாக 2026 தொடரில் களமிறங்கும், அந்த அணி ஒரு போட்டியை கூட பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாட வேண்டாம் என முடிவு செய்துள்ளதாம். அதற்கு பதிலாக புனே ஸ்டேடியத்தை, RCB அணி ஹோம் கிரவுண்டாக தேர்வு செய்துள்ளதாம். தொடர்ந்து அணிக்கு ஆதரவாக இருந்து வரும், RCB ரசிகர்களுக்கு இது பெரும் சோக செய்தியே.
News November 12, 2025
BREAKING: கூட்டணி முடிவை எடுத்தார் பிரேமலதா

தேமுதிக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், பெரும்பாலானோர் 15 தொகுதிகளுக்கு மேல் கொடுக்கும் கட்சியுடனும், சிலர் அதிமுகவுடனும் கூட்டணி அமைக்க வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நிர்வாகிகள் கருத்துகளை அமைதியாக கேட்டுக்கொண்ட பிரேமலதா, உங்களின் விருப்பப்படி முடிவு எடுக்கப்படும் என்று உறுதியளித்ததாக கூறப்படுகிறது.


