News November 17, 2024
இந்திய அணியை வழிநடத்தும் பும்ரா?

வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள ஆஸி.,-க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் கேப்டனாக பும்ரா செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தை பிறந்ததன் காரணமாக முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா பங்கேற்காததால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் 2ஆவது போட்டியில் அவர் பங்கேற்பார். மேலும், நிதிஷ்குமார் ரெட்டி இந்த போட்டியின் மூலம் டெஸ்ட்டில் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News December 16, 2025
ஜோர்டன் அரசரின் அர்ப்பணிப்பை பாராட்டிய PM

அரசுமுறை பயணமாக ஜோர்டன் சென்றுள்ள PM மோடி, மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடனான கலந்துரையாடல் ஆக்கப்பூர்வமாக இருந்ததாக
தெரிவித்துள்ளார். இந்தியா – ஜோர்டான் உறவுகளில் மன்னரின் தனிப்பட்ட அர்ப்பணிப்பு முக்கியமானது எனவும் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 75 ஆண்டுகள் ராஜாங்க உறவு வரும் காலங்களில் புதிய ஆற்றலுடன் முன்னேற்றமடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News December 16, 2025
நாசருக்கு கலைஞர் விருதை வழங்கிய CM ஸ்டாலின்

சென்னையில் முத்தமிழ் பேரவையின் சார்பில் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர் நாசருக்கு கலைஞர் விருதை வழங்கி CM ஸ்டாலின் கௌரவித்தார். பின்னர் பேசிய CM, கலைஞர் விருது பெறுவதற்கு நாசர் மிகமிக பொருத்தமானவர் என கூறினார். தொடந்து பேசிய நாசர் கலையை ஆழமாக பயன்படுத்த வேண்டும் என்ற பொறுப்பை இந்த விருது கொடுத்துள்ளதாக நெகிழ்ச்சியுடன்
தெரிவித்தார்.
News December 16, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 16, மார்கழி 1 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: துவாதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.


