News January 31, 2025
பட்ஜெட் 2025: மிடில் கிளாஸின் முக்கிய எதிர்பார்ப்புகள்

*வருமான வரி வரம்புகளில் மாற்றங்கள் *புதிய வருமான வரிமுறையில் வீட்டுக்கடனுக்கு சலுகைகள் *வீட்டு உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை *NPS திட்டத்தில் அதிகக் கழிவு *Tier-2 நகரங்களுக்கு HRA உயர்வு * வருமான வரிச்சட்டம் 80D-ல் சீர்திருத்தம் *PF வட்டிக்கு TDS பிடிப்பது ரத்து *கேபிடல் கெயின் வரி குறைப்பு *மூத்தக் குடிமக்களுக்கு பேசிக் விலக்கு வரம்பு உயர்வு *பிரிவு 80C-ல் வரிவிலக்கு வரம்பு உயர்வு.
Similar News
News March 12, 2026
இந்திய கப்பல்களுக்கு அனுமதியா? ஈரான் மறுப்பு

ஹார்முஸ் வழியாக புறப்பட்ட முதல் <<19360931>>எண்ணெய் கப்பல்<<>>(SHENLONG) மும்பையை அடைந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இனி பிரச்னை படிப்படியாகும் குறையும் என பெருமூச்சு விடுவதற்குள் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளது ஈரான். அதாவது, ஹார்முஸ் நீரிணை வழியாக இந்திய சரக்கு கப்பல்கள் செல்ல எந்த அனுமதியும் வழங்கவில்லை என ஈரான் மறுத்ததாக ஊடங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
News March 12, 2026
அக்சரிடம் மன்னிப்பு கேட்டேன்: சூர்யகுமார்

T20 WC சூப்பர் 8 சுற்றில் SA-க்கு எதிரான போட்டியில் அக்சர் படேலை அணியில் சேர்க்காததற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டதாக சூர்யகுமார் தெரிவித்தார். அதற்காக அக்சர் தன்னிடம் கோபத்தை வெளிப்படுத்தியதாகவும் கூறினார். நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக அக்சர் விளையாடாத நிலையில், SA-க்கு எதிரான போட்டியில் அவருக்கு பதிலாக வாஷிங்டன் விளையாடினார். அதில் இந்தியா தோல்வி அடைந்தது.
News March 12, 2026
மோடி ஆட்சியில் 1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை:ரகுபதி

விவசாயிகளுக்கு எதிராக திமுக செயல்படுவதாக PM மோடி வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார். 3 வேளாண் சட்டங்கள் உள்பட விவசாயிகளுக்கு எதிராக அனைத்தையும் செய்துவிட்டு அவர்களை பற்றி பேச மோடிக்கு எந்த உரிமையும் இல்லை என அவர் சாடியுள்ளார். மோடி ஆட்சியில் 1.5 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், தேர்தல் வந்தாலே TN மீது PM-க்கு பாசம் வந்துவிடும் எனவும் விமர்சித்துள்ளார்.


