News August 8, 2024

BREAKING: தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது

image

கடந்த 2 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 உயர்ந்து ஒரு சவரன் ₹50,800க்கும், கிராமுக்கு ₹20 உயர்ந்து, ஒரு கிராம் ₹6,350க்கும் விற்பனையாகிறது. இதனால், 3வது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்து, சவரன் ₹50,000க்கு கீழ் செல்லும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் சற்று ஏமாற்றமடைந்துள்ளனர்.

Similar News

News November 7, 2025

புன்முறுவல் அரசியே மானஸா!

image

தெலுங்கு வரவான மானஸா செளத்ரி, ‘ஆர்யன்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் தடம் பதித்துள்ளார். பயண ஆர்வலரான இவர், சமீபத்தில் வரலாற்று சிறப்புமிக்க கோல்கொண்டா கோட்டையில் கேஷுவலாக போட்டோஷூட் செய்துள்ளார். அந்த புகைப்படங்களை மானசா SM-ல் பதிவிட்டுள்ள நிலையில், அவரது புன்முறுவலுக்கு ரசிகர்கள் அடிக்ட் ஆகியுள்ளனர். கனவு கன்னியாக மாறப் போகும் மானஸாவின் போட்டோக்களை SWIPE செய்து பாருங்கள்.

News November 7, 2025

இந்த 8 விஷயங்கள் இருந்தா நீங்களும் ஜெயிக்கலாம்

image

வாழ்க்கையில் வெற்றி, தோல்வி என்பது நமது முயற்சியாலும், கிடைக்கும் வாய்ப்புகளாலும் அமையும் என்பார்கள். கிடைக்கும் வாய்ப்பை வெற்றியாக மாற்ற இந்த 8 விஷயங்களை தினமும் கடைப்பிடியுங்க. ➤இலக்கில் தெளிவு / கவனம் ➤சுயவிமர்சனம் ➤பொறுமை ➤திட்டமிடுதல் ➤இடைவிடாத கற்றல் ➤பேச்சுத்திறன் ➤உடற்பயிற்சி ➤சரியான ஓய்வு. இதில் எவற்றை தொடர்ச்சியாக செய்கிறீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க

News November 7, 2025

பிஹாரில் NDA -க்கு சாதகமான நிலை: விஷால் சூசகம்

image

பிஹார் தேர்தல் முடிவுகளை ஆவலோடு எதிர்பார்ப்பதாக விஷால் தெரிவித்துள்ளார். தேர்தல் களம் வலுவாக தெரிவதாகவும், அது பிஹாரின் எதிர்கால நலனுக்கு மிக முக்கியம் என்றும் அவர் X-ல் பதிவிட்டுள்ளார். 60% மேல் வாக்குகள் பதிவாகியிருப்பது NDA-வுக்கு சாதகமான மனநிலையை காட்டுவதாக விஷால் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சிறந்த வேட்பாளர் வெற்றி பெறட்டும் என்று கூறியுள்ளார்.

error: Content is protected !!