News March 28, 2024
BREAKING: ஆ.ராசா வேட்புமனு நிறுத்தி வைப்பு

நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு மீதான பரிசீலனையை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்துள்ளது. அதேபோல், அதிமுக வேட்பாளர் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் தமிழ்ச்செல்வன் வேட்புமனு பரிசீலனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் போட்டியிடும் எல்.முருகன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. திமுக, அதிமுக சார்பில் போட்டியிடுவோர் வேட்புமனுவில் பிழைகள், குளறுபடி இருப்பதாக கூறி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 15, 2026
பொங்கல் அன்று இதை செய்தால் அதிர்ஷ்டம் கொட்டும்

பொருளாதார நெருக்கடியில் தவிக்கிறீர்களா? உங்களுடைய பிரச்னை சரியாக ஐதீகம் சில வழிமுறைகளை சொல்கிறது. பொருளாதார நெருக்கடியில் இருப்பவர்கள், கோயிலுக்கோ அல்லது ஏழைகளுக்கோ சுத்தமான நெய் மற்றும் வெல்லத்தை தானமாக வழங்கலாம். வெல்லம் சூரியனுடனும், நெய் சுபிட்சத்துடனும் தொடர்புடையது. இந்த தானம் உங்கள் செல்வத்தை மேம்படுத்தும் என்கின்றனர். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News January 15, 2026
TN-ஐயும் சனாதனத்தையும் பிரிக்க முடியாது: அமைச்சர்

பண்டைய தமிழகம் ஆன்மிக பூமியாக திகழ்ந்தது, ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டன என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியுள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், TN-ஐயும் சனாதனத்தையும் பிரிக்க முடியாது இரண்டும் பின்னிப்பிணைந்தவை என்றார். ஆனால், சமீபமாக சனாதனம் மீதான மாண்பு குறைந்து வருகிறது எனவும் அது குறித்து கேலியும் விமர்சனமும் செய்யப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
News January 15, 2026
BREAKING: பொங்கல் நாளில் தங்கம் விலை புதிய உச்சம்

பொங்கல் பண்டிகையான இன்று(ஜன.15) தங்கம் சவரனுக்கு ₹80 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் வரலாறு காணாத புதிய உச்சமாக 1 கிராம் ₹13,290-க்கும், சவரன் ₹1,06,320-க்கும் விற்பனையாகிறது.


