News July 9, 2024

BREAKING: 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

image

கடந்த சில நாள்களாக தொடர் கொலை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், பல்வேறு ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அமலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக அமல்ராஜ், தாம்பரம் காவல் ஆணையராக அபின் தினேஷ், வடக்கு மண்டல ஐஜியாக அஸ்ரா கர்க், சென்னை வடக்கு கூடுதல் ஆணையராக நரேந்திரன், தென் மண்டல ஐஜியாக பிரேம் ஆனந்த் சின்ஹா உள்ளிட்ட 18 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News July 8, 2025

தமிழ் சினிமாவில் மமிதா பைஜுவின் ஆதிக்கம்

image

‘பிரேமலு’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான மமிதா தற்போது தமிழில் முக்கிய நடிகையாக மாறியுள்ளார். விஜய் தொடங்கி தனுஷ் வரை முக்கிய ஹீரோக்களின் படத்தில் ஃபர்ஸ்ட் புக் செய்யப்படும் நடிகை மமிதா தான். விஜய்யின் ‘ஜனநாயகன்’, சூர்யாவின் 46-வது படம், பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’, விஷ்ணு விஷாலின் ‘இரண்டாம் வானம்’, தனுஷின் புதிய படம் உள்ளிட்ட 5 முக்கிய நடிகர்களின் படங்களில் மமிதா நடிக்கிறார்.

News July 8, 2025

இந்த பெண்ணுக்கு 16-ம் தேதி தூக்கு தண்டனை

image

ஏமன் சிறையில் இருக்கும் கேரள நர்ஸ் நிமிஷா பிரியா, இந்த மாதம் 16-ம் தேதி தூக்கிலிட இருப்பது இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2017-ல் தலால் அப்தோ மெஹ்தி என்பவரை கொலை செய்ததாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார். குற்றம் உறுதியானதால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. நிமிஷாவின் தண்டனையை குறைக்க அவரது தாயார் போராடி வந்தார். எனினும் தூக்கிலிடப்படும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 8, 2025

இதை சாப்பிட்டா HEART ATTACK வரும்… எச்சரிக்கை!

image

பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை, மீண்டும் பயன்படுத்துவது ஆபத்தானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இந்த உணவுகளை சாப்பிட்டால் இதயநோய், புற்றுநோய், உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. ஆனால், ஹோட்டல்களில் 60% அளவுக்கு, எண்ணெய் மீண்டும் பயன்படுத்தப்படுகிறதாம். டெல்லி, மும்பை, கொல்கத்தாவை ஒப்பிட சென்னை பரவாயில்லையாம். எனினும், வடை, பஜ்ஜி, போண்டா, சில்லி சிக்கன் சாப்பிடுமுன் யோசிக்கவும்.

error: Content is protected !!