News November 30, 2025
BREAKING: ரெட் அலர்ட்.. கனமழை வெளுத்து வாங்கும்

திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று(நவ.30) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, வேலூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட், திருப்பத்தூர், தி.மலை, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் இன்று மாலை மணிக்கு 80 km வேகத்தில் காற்று வீசும் எனவும் IMD எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News December 2, 2025
தொகுதிப் பங்கீட்டில் இறங்கிய புதுச்சேரி ஆளும் கூட்டணி

புதுச்சேரியில் பாஜக, NR காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2026 தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இருகட்சிகளும் ஈடுபட்டுள்ளன. CM ரங்கசாமியின் இல்லத்தில் பாஜகவின் புதுச்சேரி மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் தலைமையில் இந்த ஆலோசனை நடைபெற்றது. கடந்த தேர்தலில் NR காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், மீதமுள்ள 14 தொகுதிகளில் BJP, ADMK ஆகிய கட்சிகள் போட்டியிட்டது.
News December 2, 2025
புயல் சின்னம் நகரும் வேகம் குறைந்தது

வங்கக் கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகரும் வேகம் குறைந்திருப்பதாக IMD தெரிவித்துள்ளது. மணிக்கு 8 கி.மீ., வேகத்தில் இருந்து 3 கி.மீ., ஆக குறைந்துள்ளது. சென்னைக்கு அருகிலேயே தாழ்வு மண்டலம் நிலை கொண்டதால் 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 12 மணிநேரத்தில், இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்பின் மழை குறைய தொடங்கும்.
News December 2, 2025
இந்தியாவின் பிரம்மாண்ட கோட்டைகள் PHOTOS

இந்தியாவில் உள்ள பிரம்மாண்ட கோட்டைகள் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை சுமந்து நிற்கின்றன. எதிரிகள் நுழைய முடியாத வகையில், சாம்ராஜியத்தை பாதுகாக்க மன்னர்கள் கோட்டைகளை கட்டியுள்ளனர். இந்த கோட்டைகள் நூற்றாண்டுகள் கடந்து இன்றும் கம்பீரமாக நிற்கின்றன. மேலே, உங்களுக்காக சில பிரம்மாண்டமான கோட்டைகளை போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


