News November 30, 2025
BREAKING: நாளை விடுமுறையா? வந்தது அலர்ட்

புயல் எதிரொலியால் நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டை IMD விடுத்துள்ளது. ராணிப்பேட்டை, காஞ்சி, தி.மலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரியில் கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது.
Similar News
News December 2, 2025
திருவாரூர்: 10th போதும் அரசு வேலை!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள 1383 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th, 12th, டிப்ளமோ
3. கடைசி தேதி : 02.12.2025
4. சம்பளம்: ரூ.18,000 – ரூ.1,51,100
5. வயது வரம்பு: 18 – 40 (SC/ST – 45, OBC – 43)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..
News December 2, 2025
பாமகவை மீட்க குழு அமைத்தார் ராமதாஸ்

அன்புமணிதான் பாமகவின் தலைவர் என்று ECI கூறிவிட்டது. இந்நிலையில், அன்புமணி வசம் சென்ற பாமகவை மீட்பதற்காக ஜி.கே.மணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். நீதிமன்றங்களில் சட்ட போராட்டங்களை நடத்தும் பணியை இக்குழு மேற்கொள்ளும் எனக் கூறிய ராமதாஸ், கட்சித் தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம்; கட்சி மற்றும் தேர்தல் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
News December 2, 2025
‘Word of the Year’ இது தான்!

2025-ம் ஆண்டின் ’Word of the Year’ ஆக ‘Rage bait’ என்ற வார்த்தையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தேர்வு செய்துள்ளது. aura farming, biohack உள்ளிட்ட வார்த்தைகளும் இப்பட்டியலில் இடம்பெற்றிருந்தன. இறுதியாக, பொதுமக்களிடம் நடத்திய வாக்கெடுப்பின் அடிப்படையில் Rage bait தேர்வு செய்யப்பட்டுள்ளது. வியூஸ்களை அதிகரிக்க கோபம், வெறுப்பை தூண்டும் வகையில் உருவாக்கப்படும் SM கன்டென்ட் Rage bait எனப்படுகிறது.


