News November 25, 2025
BREAKING: வேட்பாளர்களை அறிவித்த ராமதாஸ்!

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்குமரன், MLA அருள் ஆகியோர் நிச்சயம் போட்டியிடுவார்கள் என ராமதாஸ் அறிவித்துள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் விரைவில் போராட்டத்தை நடத்த உள்ளதாக கூறினார். இரு அணிகளாக பிரிந்து கிடக்கும் பாமகவை இணைக்க NDA தரப்பினர் ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. உங்கள் கருத்து என்ன?
Similar News
News January 19, 2026
மிகப்பெரிய ஸ்டாருடன் எப்படி போட்டி போடுவீர்கள்.. சுதா

விஜய் ரசிகர்களை <<18852101>>ரவுடிகள் <<>>என கூறியதற்கு சுதா கொங்கரா கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். இந்நிலையில், தான் விஜய்யின் மிகப்பெரிய ரசிகை, நாட்டின் மிகப்பெரிய ஸ்டாருடன் எப்படி போட்டி போட முடியும் என்று விளக்கமளித்துள்ளார். மேலும், ஜன நாயகன் வெளியீட்டுக்கு 2 நாள்கள் மட்டும் இருக்கையில், சென்சார் போர்டு செய்தது தவறு என்றும், எந்த படத்திற்கும் அவ்வாறு நடக்கக்கூடாது எனவும் கூறினார்.
News January 19, 2026
FLASH: தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இறுதியாகிறது!

அதிமுக – பாஜக இடையேயான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் வரும் 22-ம் தேதி கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக இருகட்சி தலைவர்களும் டெல்லி, சென்னை என பயணித்து ஆலோசனைகளை நடத்தி முடித்துவிட்டனர். வரும் 23-ம் தேதி மதுராந்தகத்தில் PM மோடி தலைமையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் NDA-ல் இடம் பெறும் கூட்டணி கட்சித் தலைவர்களையும் மேடையேற்ற, பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
News January 19, 2026
கொஞ்சம் பொறுப்புடன் இருங்க நெட்டிசன்ஸ்!

சோஷியல் மீடியா யுகத்தில் எல்லாமே Content. வெளிவரும் அனைத்து வீடியோவையும் உடனே நம்பி, ஒருவர் மீது விமர்சனங்களை கொட்ட வேண்டாம். <<18894136>>கேரளாவில் <<>>பெண் ஒருவர் குற்றம்சாட்டியதில், அவமானம் தாங்க முடியாத ஆண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொஞ்சம் யோசியுங்கள். ஒருநாள் நாமும் இதேபோன்ற ஒரு சூழலால் பாதிக்கப்படலாம் என்பதையும் உணருங்கள். எங்கோ யாரோ வேறு ஒருவரின் கமெண்ட்டும் ஒருவரின் வாழ்க்கையை பாதிக்கலாம்!


