News November 13, 2025

BREAKING: விடுமுறை… நாளை முதல் 3 நாள்கள் அரசு அறிவிப்பு

image

வார விடுமுறையையொட்டி நாளை முதல் (நவ.14) 3 நாள்களுக்கு 920 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பஸ் இயக்கப்படும். www.tnstc.in இணையதளம், மொபைல் ஆப் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். SHARE IT

Similar News

News December 11, 2025

திருச்சி: பசுமை சாம்பியன் விருது விண்ணப்பிக்க அழைப்பு

image

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு சிறந்த பங்களிப்பை செய்யும் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு “பசுமை சாம்பியன்” விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnpcp.gov.in என்ற தளத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்து வரும் ஜனவரி 20-ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News December 11, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (டிச.11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News December 11, 2025

திருப்பரங்குன்றம் விவகாரம்.. கொந்தளித்த அமித்ஷா

image

ஒரு தீர்ப்பை வழங்கியதற்காக நீதிபதி மீது எதிர்க்கட்சிகள் பதவிநீக்க தீர்மானம் கொண்டு வந்தது, அர்த்தமற்றது என அமித்ஷா கூறியுள்ளார். Parliment-ல் திருப்பரங்குன்றம் விவகாரத்தை மறைமுகமாக குறிப்பிட்ட அமித்ஷா, யாரையோ திருப்திப்படுத்த தீர்மானம் கொண்டுவரப்பட்டதாக பேசியுள்ளார். மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிக்கு எதிராக உத்தவ் தாக்கரே கட்சி கூட கையெழுத்திட்டுள்ளதாக அமித்ஷா சாடினார்.

error: Content is protected !!