News August 23, 2025

BREAKING: ரேபிஸ் நோய்க்கு சேலத்தில் இருவர் பலி!

image

சேலம்: ஆத்தூர் மந்தைவெளி பகுதியை சேர்ந்த தர்மன் (35). இவருடைய வீட்டில் வளர்த்து வந்த நாய் இவரை கடித்துள்ளது. இதனை அடுத்து முறையாக சிகிச்சை பெற்றுக் கொள்ளாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென்று இன்று உயிரிழந்தார். ரேபீஸ் நோய் தாக்கியதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதே போல் கடந்த சில நாள்களுக்கு முன் ரேபீஸ் நோய் தாக்கி கொங்கணாபுரத்தை சேர்ந்தவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News January 20, 2026

உளுந்து, பச்சைப்பயறுக்கு அரசு ஆதரவு விலை அறிவிப்பு

image

சேலம் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள பச்சைப்பயறு மற்றும் உளுந்தை அரசு விலை ஆதரவு திட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்கலாம் என ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இதன்படி பச்சைப்பயறு கிலோ ரூ.87.68-க்கும், உளுந்து ரூ.78-க்கும் கொள்முதல் செய்யப்பட உள்ளது. விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது விளைபொருட்களை விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சாதாரண தறிகளை நவீனமயமாக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

image

சேலம் மாவட்டத்தில் சாதாரண தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், பட்டியலிடப்படாத நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். விருப்பமுள்ள நிறுவனங்கள் வருகின்ற 23-ஆம் தேதிக்குள் கைத்தறி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பை உரிய நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆட்சியர் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!