News February 23, 2025

BREAKING: மேலும் ஒரு நிர்வாகி விலகல்

image

தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியிலிருந்து பல்வேறு பொறுப்பாளர்கள் விலகி வரக்கூடிய சூழலில் சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியிலிருந்து நிர்வாகிகள் விலகி வருகின்றனர். இந்த நிலையில் இன்று சேலம் மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பணியாற்றி வந்த சபரி என்பவர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Similar News

News July 9, 2025

சேலம்: பெண்களுக்கு ரூ.50,000 திருமண உதவி!

image

தமிழக அரசு சார்பில், பெற்றோரில்லாத பெண்களுக்காக, அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டம் 1-ல் ரூ.25,000, திட்டம் 2-ல் ரூ.50,000 உதவித்தொகையோடு, தாலி செய்வதற்காக 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க, சேலம் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு சென்றோ அல்லது இ-சேவை மையங்களிலோ விண்ணப்பிக்கலாம். SHARE IT <<17008033>>(தொடர்ச்சி 1/2)<<>>

News July 9, 2025

திட்டத்திற்கான தகுதிகள் என்ன?

image

▶️அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவி திட்டம் – 1 இன் கீழ் உதவித்தொகை (ரூ.25,000) பெற கல்வித் தகுதி தேவையில்லை ▶️ திட்டம் – 2 இன் கீழ் உதவித்தொகை (ரூ.50,000) பெற டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் ▶️ விண்ணப்பதாரர் பெற்றோர்களால் கைவிடப்பட்ட அல்லது பெற்றோர்களை இழந்தவராக இருக்க வேண்டும் ▶️ திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

News July 9, 2025

பொது வேலைநிறுத்தம்- ஷேர் ஆட்டோக்கள் இயங்கவில்லை

image

மத்திய அரசின் தொழிலாளர்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும், 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஜூலை 09) தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலைநிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஷேர் ஆட்டோக்கள் இயங்காததால் பேருந்து பயணிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர்.

error: Content is protected !!