News November 17, 2025

BREAKING: முதல்வர் ஸ்டாலின் வீட்டில் பரபரப்பு

image

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள CM ஸ்டாலினின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக, போலீஸ் தலைமை இயக்குநர் இ-மெயிலுக்கு நள்ளிரவில் மிரட்டல் வந்துள்ளது. இதனால் பதறிப்போன போலீசார் CM வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையில், அது வெறும் வதந்தி என தெரிய வந்தது. சமீப காலமாகவே அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதால், சைபர் கிரைம் தீவிரமாக விசாரித்து வருகிறது.

Similar News

News December 7, 2025

பணம் கொடுத்தார் ஸ்டாலின்.. அனைவரும் இத செய்யுங்க

image

கொடிநாளையொட்டி சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிடம் CM ஸ்டாலின் நிதியளித்தார். இதுகுறித்து அவரது X பக்கத்தில், மக்கள் பாதுகாப்பாக வாழ உயிரைத் துச்சமாக எண்ணி காவல் காக்கும் படை வீரர்களின் பணி ஈடு இணையற்றது. தியாகத் தீரர்களின் மறுவாழ்வுக்கும், அவர்களின் குடும்ப நலுனுக்கும் அனைவரும் கொடிநாள் நிதியளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக PM மோடியும் நிதியளித்துள்ளார்.

News December 7, 2025

சரித்திரம் படைத்தார் அபிஷேக் சர்மா!

image

ஒரே ஆண்டில் T20-ல் 100 சிக்ஸர்களை கடந்த ஒரே இந்தியர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார். சையத் முஷ்டாக் அலி தொடரில், சர்வீசஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 3 சிக்ஸர்களை விளாசி இச்சாதனை படைத்துள்ளார். 2025-ல் T20 கிரிக்கெட்டில், தற்போது வரை அவர் 101 சிக்சர்களை அடித்துள்ளார். இப்போட்டியில் முதலில் பஞ்சாப் 233/6 ரன்களை குவிக்க, சர்வீசஸ் அணி 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

News December 7, 2025

கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார் செங்கோட்டையன்

image

தவெக கூட்டணியில் TTV, OPS இணைவார்கள் என கூறப்படும் நிலையில், அதுகுறித்து செங்கோட்டையன் சூசகமாக பதிலளித்துள்ளார். விஜய்க்கு வழிகாட்டியாக இருந்து வெற்றிக்கு உதவுவேன் என கூறிய KAS, இதற்கு அனைவரும் ஒன்றுதிரண்டு ஆதரவளிக்க வேண்டும் என TTV, OPS-க்கு வேண்டுகோள் வைத்துள்ளார். இந்த பதிலால் TTV, OPS உடன் அவர் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது மறைமுகமாக உறுதியாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!