News October 6, 2025
BREAKING: மதுரையில் மீண்டும் நிறுவப்பட்ட MGR சிலை

மதுரை, அவனியாபுரத்தில் எம்ஜிஆர் சிலையை சமூக விரோதிகள் சேதப்படுத்தினர். மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பார்வையிட்டு பின் காவல்துறை அதிகாரியிடம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு சமூக விரோதியை கைது செய்ய வேண்டுகோள் விடுத்தார். அதனை தொடர்ந்து உடனடியாக எம்ஜிஆர் சிலையை மராமத்து செய்து அதே இடத்தில் வைத்து மாலை அணிவிதது மரியாதை செய்யப்பட்டது. அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Similar News
News November 16, 2025
மதுரை: டூவீலரில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

மதுரை திருமங்கலத்தை சேர்ந்த கண்ணன் தனது மனைவி செல்வியுடன் 41 கடந்த 11ஆம் தேதி விருதுநகர் திண்டுக்கல் சர்வீஸ் ரோட்டில் டூவீலரில் சென்று கொண்டிருந்த போது செல்வி தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று (நவ 15) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மகன் புகாரில் திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 16, 2025
மதுரை: எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

மதுரை மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் இங்கு <
News November 16, 2025
மதுரையில் வாலிபருக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு

மதுரை பேரையூர் அருகே மங்கள்ரேவு தெற்கு தெருவில் இறந்தவர் உடலை அடக்கம் செய்வதற்காக நேற்று மயானத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது உறவினர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது, துக்க வீட்டைச் சேர்ந்த 6 பேர் சேர்ந்து அதை ஊரைச் சேர்ந்த தங்கமுத்து 35 என்பவரை அரிவானால் வெட்டினர், கையில் வெட்டு காயம்பட்ட அவர் பேரையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


