News October 11, 2025

BREAKING: மதுரையில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட 2 ஊர்கள்

image

மதுரை, மேலூர் ஒன்றியத்திலுள்ள சாந்தமங்கலம் ஊராட்சியில் இன்று காலை (11-10-2025) கிராமசபை கூட்டம் நடைபெற்றது. பல்வேறு குடிநீர், தெரு விளக்குகள், குப்பை அகற்றுதல், சாலை வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பேசப்பட்ட நிலையில்,
ஒத்தச்சேரி என்ற பெயரை ஒத்தப்பட்டி எனவும் அய்யனார் காலனியை மாற்றி அய்யனார்புரம் எனவும் மாற்றி கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Similar News

News December 9, 2025

மதுரை: டிகிரி போதும்., தேர்வு இல்லாத SBI வங்கி வேலை!

image

மதுரை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News December 9, 2025

மதுரை: தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்த பெண் பலி

image

மதுரை வடக்கு ஆவணி மூல வீதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மனைவி சுமதி(54). நேற்று இவருக்கு தாகம் எடுத்ததால் தண்ணீர் குடிக்க சமையலறைக்கு சென்று, தண்ணீர் என நினைத்து பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த ஆசிட்டை எடுத்து தவறுதலாக குடித்துள்ளார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். திலகர் திடல் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 9, 2025

மதுரையில் ஒரே நாளில் 300 பேர் கைது

image

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாண் மீது கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை நிறைவேற்றாமல் முருக பக்தர்களை அவமதித்ததாக, தமிழக அரசை கண்டித்து ஹிந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது. எழுமலையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்கள் தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு இரவில் விடுவிக்கப்பட்டனர்.

error: Content is protected !!